செப்டம்பர் 15, 2025
பத்திரிகை அறிக்கை.
வக்ஃபு திருத்தச் சட்டம் குறித்த உச்சநீதிமன்றத்தின் இடைக்கால உத்தரவு
நிர்வாக அதிகார மீறல் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.
புது தில்லி:
ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த்
அகில இந்திய தலைவர்
சையத்
சஆதாதுல்லாஹ் ஹுசைனி,
வக்ஃபு (திருத்த) சட்டம், 2025 குறித்த உச்சநீதிமன்றத்தின் இடைக்கால உத்தரவு குறித்து அறிக்கை வெளியிட்டார்.
இந்த உத்தரவு, சட்டத்தில் உள்ள முக்கிய அரசியலமைப்பு குறைபாடுகளை வெளிப்படுத்தியுள்ளதாகவும்,
அரசின் மிகவும் நியாயமற்ற சில விதிகளை கட்டுப்படுத்தியுள்ளதாகவும் அவர் கூறினார்.
வக்ஃபு சொத்துக்கள் மீதான நிர்வாகத் தலையீடு மற்றும் ஐந்தாண்டு இஸ்லாமிய பயிற்சி என்ற நடைமுறைக்கு முட்டுக்கட்டை போடப்பட்டதற்காகவும்
நாங்கள் இந்த இடைக்கால
பாதுகாப்பு நடவடிக்கைகளை பாராட்டுகின்றோம்.
அதேநேரம், வக்ஃபு பயன்பாட்டு முறையை ஒழிப்பது உள்ளிட்ட முக்கிய பிரச்சினைகள் இன்னும் தீர்க்கப்படவில்லை.
இறுதித் தீர்ப்பில் இந்த பிரச்சினைகள் சரிசெய்யப்படும் என்ற நம்பிக்கையை நாங்கள்
வெளிப்படுத்துவதுடன்,
முழுமையான நீதி கிடைக்கும் வரை
சட்டரீதியாகவும்,
ஜனநாயக ரீதியாகவும் போராட்டத்தை தொடர உறுதி பூண்டுள்ளோம்.
மேலும்
அகில இந்திய தலைவர் கூறியதாவது:
நீதிமன்றம்,
மாவட்ட ஆட்சியர்கள் மற்றும்
நியமிக்கப்பட்ட அதிகாரிகளுக்கு வழங்கப்பட்டிருந்த
வக்ஃபு சொத்துக்களை நீதித்துறை முடிவு இல்லாமல் அரசு நிலமாக ஒருதலைப்பட்சமாக அறிவிக்கும் அதிகாரங்களை ரத்து செய்துள்ளது.
இந்தச் சட்டம் நிர்வாகத்திற்கு,நீதித்துறையின் அதிகாரங்களை வழங்க முயன்றது என்றும், அரசியலமைப்பின் அடிப்படைக் கோட்பாடான அதிகாரப் பிரிவினையை மீறியது என்றும் நாங்கள் வாதிட்ட நிலைப்பாட்டை உறுதிப்படுத்துகிறது.
இந்த உத்தரவு,
வக்ஃபு நிர்வாகத்தில் தேவையற்ற தலையீட்டிற்கு எதிரான தெளிவான கண்டனமாகவும், சமூகத்தின் கவலைகளை உறுதிப்படுத்துவதாகவும் உள்ளது.
ஒருவர் வக்ஃபுக்கு சொத்து வழங்கும் போது ஐந்து ஆண்டுகள் இஸ்லாமிய பயிற்சியை நிரூபிக்க வேண்டும் என்ற விதி குறித்து, ஜமாஅத் தலைவர் கூறியதாவது:
இந்த விதிக்கு இடைக்காலத் தடை விதிக்கப்பட்டது மீண்டும் எங்கள் நிலைப்பாட்டை உறுதிப்படுத்துகிறது.
இது பாகுபாடு,
நியாயமற்றது மற்றும் நடைமுறைக்கு ஒவ்வாதது என்று நாங்கள் தொடர்ந்து வாதிட்டோம்.
நீதிமன்றத்தின் தலையீடு,
இத்தகைய அரசியலமைப்பிற்கு முரணான விதிகள் நீதித்துறை ஆய்வை தாங்காது என்பதை நிரூபிக்கிறது.
இறுதி உத்தரவில் இந்த விதி முழுமையாக ரத்து செய்யப்படும் என நாங்கள் எதிர்பார்க்கிறோம்.”
தற்போதைய விவாதங்களில் உள்ள பிரச்சினைகள் குறித்து தலைவர் சையத் சஆதாதுல்லாஹ் ஹுசைனி கூறியதாவது: “விவாதங்கள் நிலுவையில் இருக்கும் வரை, அதிகாரிகள் வருவாய் பதிவுகளை மாற்றுவதையோ அல்லது வக்ஃபு சொத்துக்களை அங்கீகரிக்கப்படாமல் நீக்குவதையோ நீதிமன்றம் தடை செய்துள்ளது.
இது, நியாயமற்ற பறிமுதல் மற்றும் சிறுபான்மையினரின் அறக்கட்டளைகளை நிர்வகிக்கும் அரசியலமைப்பு உரிமையை, தகுதியான நீதிமன்றம் அல்லது தீர்ப்பாயம் இறுதி தீர்ப்பு வழங்கும் வரை பாதுகாக்கிறது.
அரசு நியாயமான செயல்முறையை மீற முயன்றது என்ற எங்கள் நிலைப்பாட்டை மீண்டும் உறுதிப்படுத்துகிறது.”
இருப்பினும், ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த்
இறுதி விசாரணையில் பல முக்கிய பிரச்சினைகள் இன்னும் தீர்க்கப்பட வேண்டும் என்று குறிப்பிட்டது.
“வக்பு பயன்பாட்டு முறையை ஒழிக்கும் விதி,
ஆவணங்கள் இல்லாமல் நூற்றாண்டுகளாக பராமரிக்கப்பட்ட ஆயிரக்கணக்கான வரலாற்று மசூதிகள்,
கபரஸ்த்நதான் மற்றும் ஈத்காக்களுக்கு ஆபத்தை விளைவிக்கிறது.
இந்தியா போன்ற ஒரு நாட்டில், பல மத நிறுவனங்கள் ஆவணங்கள் இல்லாமல் உள்ளன என்பதால், இந்தக் கோட்பாடு மிகவும் அவசியமானது என்று நாங்கள் எப்போதும் வலியுறுத்தியுள்ளோம்.
இறுதி உத்தரவில்
இது உறுதிப்படுத்தப்படும் என்று நாங்கள் நம்புகிறோம்.”
புதிய சட்டத்தின் கீழ் அனைத்து வக்புகளையும் பதிவு செய்ய குறுகிய கால அவகாசம் விதிக்கப்பட்டிருப்பதன் நடைமுறை சிக்கல்கள் குறித்து அவர் கூறியதாவது:
“இந்தியா போன்ற பரந்த நாட்டில், பல பழமையான, கிராமப்புற மற்றும் ஆவணப்படுத்தப்படாத நிறுவனங்கள் உள்ளன. இத்தகைய குறுகிய காலத்தில் பதிவு செய்ய வேண்டும் என்ற நிபந்தனை நடைமுறைக்கு ஒவ்வாதது மட்டுமல்ல, தொந்தரவு மற்றும் உண்மையான வக்புகளை பெருமளவில் விலக்குவதற்கு வழிவகுக்கும். இந்த கவலை இறுதி தீர்ப்பில் சரிசெய்யப்பட வேண்டும்.”
வக்பு நிறுவனங்களில் முஸ்லிமல்லாத உறுப்பினர்கள் தொடர்பான நீதிமன்றத்தின் இடைக்கால கட்டுப்பாடு குறித்து
ஜமாஅத் தலைவர் கூறியதாவது:
“வக்ஃபு வாரியங்களிலும் மத்திய வக்ஃபு கவுன்சிலிலும் முஸ்லிம் பெரும்பான்மையை உறுதி செய்வது முக்கியம்.
ஆனால் முஸ்லிமல்லாத உறுப்பினர்கள் என்ற கருத்து தவறானது. முஸ்லிம்கள் தங்களால் நிர்வாக திறன் அல்லது அரசு மேற்பார்வையை உறுதி செய்ய முடியாது என்ற கருத்து நியாயமற்றது
மற்றும் பாகுபாடு காட்டுவது.
ஒரு மத அறக்கட்டளை அமைப்பில் முஸ்லிமல்லாத உறுப்பினர்களை திணிப்பது, சமூகத்தின் மீதான நம்பிக்கையின்மையையும், தலையீட்டையும் குறிக்கிறது. இத்தகைய நடவடிக்கைகள் மற்ற மத சமூகங்களின் நிறுவனங்களுக்கு பயன்படுத்தப்படுவதில்லை, எனவே இந்த விதி ஏற்க முடியாதது.”
இந்த அறிக்கை, இது ஒரு இடைக்கால உத்தரவு மட்டுமே என்றும், சட்டப் போராட்டம் இன்னும் முடிவடையவில்லை என்றும் மீண்டும் வலியுறுத்தியது.
“இந்த உத்தரவு, வக்ஃபு திருத்தச் சட்டம், 2025, கடுமையான அரசியலமைப்பு குறைபாடுகளால் பாதிக்கப்பட்டுள்ளதை நிரூபிக்கிறது.
இவற்றில் சில இந்த தீர்ப்பால் ஏற்கனவே வெளிப்படுத்தப்பட்டுள்ளன.
மற்றவை இறுதி விசாரணையில் தீர்க்கப்படும் என்று நாங்கள் நம்புகிறோம். ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த், மற்ற அமைப்புகளுடன் இணைந்து, இந்த அரசியலமைப்பிற்கு முரணான சட்டம் முழுமையாக ரத்து செய்யப்படும் வரை சட்டரீதியாகவும், ஜனநாயக ரீதியாகவும் போராட்டத்தை தொடரும். அரசியலமைப்பு கோட்பாடுகள் மற்றும் சமூகத்தின் கவலைகளின் அடிப்படையில் இந்தச் சட்டத்தை உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என்று நாங்கள் மீண்டும் அரசை வலியுறுத்துகிறோம்.”
வெளியீடு;
சல்மான் அகமது
தேசிய செயலாளர், ஊடகத் துறை
ஜமாஅத்தேஇஸ்லாமி ஹிந்த்,
தலைமையகம்
புது தில்லி