News Channel

சேலம் ஆசிரியர்கள் தினம் அனுசரிப்பு

செப்டம்பர்- 05 ஆசிரியர் தினத்தில் ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் சேலம் பச்சப்பட்டி மற்றும் ஜங்ஷன் வட்டங்களின் சார்பாக ஆசிரியர் தினத்தை முன்னிட்டு குட்வில் ஸ்கூல் , கிரெசென்ட் ஸ்கூல் , அரசினர் தொடக்கப்பள்ளி பச்சபட்டி, அரசினர் தொடக்கப் பள்ளி ஜங்ஷன், மற்றும் தாருல்  இஸ்லாம் மேல் நிலை பள்ளி ஆகிய பள்ளிகளுக்கு சென்று ஆசிரியர்களை சந்தித்து ஆசிரியர் தின வாழ்த்துக்களை தெரிவித்து அவர்களுடன் கலந்துரையாடப்பட்டது. அதைத்தொடர்ந்து சமரசம் உதயதாரகை மற்றும் இனிப்புகள் வழங்கி மகிழ்ச்சியை பரிமாறிக் கொண்டனர். ஆசிரியர்களும் தங்களுடைய மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டனர். இந்த சந்திப்பில் ஜமாத்தே இஸ்லாமி ஹிந்த் சேலம் பச்சப்பட்டி மற்றும் ஜங்ஷன் வட்டங்களின் பெண் ஊழியர்கள் கலந்து கொண்டனர்.