05/09/2025 (12/03/1447) வெள்ளிக்கிழமை கடையநல்லூர் ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் சார்பாக, கடையநல்லூர் பேட்டை முஸ்லிம் மேல்நிலைப் பள்ளியில் வைத்து மீலாது & ஆசிரியர் தின சிறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு கடையநல்லூர் ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த பொறுப்பாளர்
பீர் முஹம்மது அவர்கள் தலைமை ஏற்று நடத்தினார்கள்.
ஆரம்பமாக சகோதரி ஜுவைரிய்யா பானு கிராஅத் ஓதினார்கள்.
சகோதரர் பொறியாளர் ஜபருல்லாஹ் அவர்கள் அனைவரையும் வரவேற்று உரை நிகழ்த்தினார்கள்.
ஜமாஅத்தின் நகரப் பொறுப்பாளர் சகோதரர் பீர் முஹம்மது அவர்களின் அறிமுக உரைக்குப் பிறகு
மவ்லவி அஹமத் முஹ்யித்தீன் ஃபைஜி அவர்கள் ஜமாஅத்தின் பணிகள் பற்றிய அறிமுக உரை நிகழ்த்தினார்கள்.
கடையநல்லூர் உலகா மேல்நிலைப்பள்ளி நிர்வாகி, Ln. நல்லாசிரியர் சண்முக சுந்தரம், M.A., M.Ed. M.Phil.,MBA. அவர்களும்,
தமிழ் நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் வட்டார செயலாளர் E. ரமேஷ அவர்களும் வாழ்த்துரை வழங்கினார்கள்.
அதைத் தொடர்ந்து AIITA-வின மாநிலத் தலைவர் முனைவர் ஸலாஹுத்தீன் அவர்கள் சிறப்புரை நிகழ்த்தினார்கள்.
இறுதியாக சகோதரர் அப்துர் ரஹ்மான் அவர்களின் நன்றியுரையுடன் நிகழ்ச்சி நிறைவடைந்தது.