ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் சென்னை மெட்ரோ சார்பில் இளைஞர் சந்திப்பு நிகழ்ச்சி
சென்னை: ஜமாஅத்-இ-இஸ்லாமி ஹிந்த் (JIH) சென்னை மெட்ரோ சார்பாக, கடந்த செப்டம்பர் 14, 2025 அன்று, “பன்மைச் சமூகத்தில் நம்பிக்கை மற்றும் அடையாளம்” (Faith & Identity in a Plural Society) என்ற தலைப்பில் இளைஞர்களுக்கான சிறப்புச் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்த நிகழ்வில், ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் தமிழ்நாடு துணை அமீர் ஐ. ஜலாலுதீன் அவர்கள் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு உரையாற்றினார். நவீன உலகில் இஸ்லாமிய இளைஞர்கள் எதிர்கொள்ளும் சவால்கள் குறித்தும், இஸ்லாமிய நம்பிக்கையையும் தனித்துவத்தையும் பேணிக்காப்பது குறித்தும் தனது உரையில் ஆழமாகப் பேசினார்.
இந்நிகழ்வில் 100-க்கும் மேற்பட்ட இளைஞர்கள் ஆர்வத்துடன் கலந்துகொண்டனர். கலந்துரையாடல் அமர்வின் மூலம் இளைஞர்கள் தங்களின் சந்தேகங்களைக் கேட்டறிந்து, பயனுள்ள வழிகாட்டுதல்களைப் பெற்றுக்கொண்டனர். இந்தச் சந்திப்பு, இளைஞர்களிடையே விழிப்புணர்வையும், நம்பிக்கையையும் வளர்ப்பதற்கான ஒரு முக்கிய முயற்சியாக அமைந்தது.