அல்லாஹ்வின் மாபெரும் அருளால்
"சமூக நல்லிணக்க மீலாது விழா மற்றும் கண்காட்சி" ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த், திருவள்ளூர் மாவட்டம், கோணிமேடு கிளை சார்பாக 6-9-2025 அன்று இனிதே நடைபெற்றது.
இந்நிகழ்வை GIO மாணவிகள் கிராஅத் ஓதி ஆரம்பித்தனர்.
சகோதரர் முஹம்மது சமீர் அவர்கள் வரவேற்பு உரையாற்றினார்.
கோனிமேடு கிளைத் தலைவர் சகோதரர் சர்புதீன் தலைமை உரையாற்றினார்.
சிறப்பு விருந்தினராக அழைக்கப்பட்ட தவத்திரு. திருவடிக்குடில் சுவாமிகள் அவர்கள் "உலக மக்கள் அனைவருக்குமானவர் நபிகள் நாயகம்" என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்.
அவர்களை தொடர்ந்து ஜமாஅத் தே இஸ்லாமிய ஹிந்த் ,மாநில செயலாளர் S.N.சிக்கந்தர் சாஹிப் அவர்கள் நபிகள் நாயகம் மாபெரும் சாதனையாளர், உலக மக்களுக்கான வழிகாட்டி
என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்.
இதில் மொத்தம் 150-க்கும் அதிகமான முஸ்லிம் மற்றும் சகோதர சமய மக்கள் கலந்து கொண்டு பயன் அடைந்தனர்.
GIO மற்றும் CIO மாணவர்கள் இணைந்து இஸ்லாமிய கண்காட்சி ஏற்பாடு செய்திருந்தனர். 25க்கும் அதிகமான மாதிரிகள், அழைப்பு பணி, இஸ்லாமிய சமுதாய சீர்திருத்தம், தஸ்கியா என்ற அடிப்படையில் கண்காட்சியில் வைக்கப்பட்டிருந்தன.
சகோதரர்.அஹமது பாட்ஷா அவர்களின் நன்றியுரை உடன் இனிதே நிறைவுற்றது. நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைவருக்கும் இரவு உணவு வழங்கப்பட்டது.