News Channel

வெற்றியின் பக்கம் வாருங்கள் பண்பியல் பயிற்சி பட்டறை

அன்பானவர்களே !

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்).....!

ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் சேலம் வட்டத்தின் சார்பாக வெற்றியின் பக்கம் வாருங்கள் என்ற மையக் கருத்தில் உறுப்பினர்கள், ஊழியர்கள் மற்றும் தன்னார்வலர்களுக்கான 
ஒரு நாள் சிறப்பு தர்பியா நிகழ்ச்சி 
7-9-2025 ஞாயிற்றுக்கிழமை காலை 11 மணி முதல் 
மாலை 5 மணி வரை ஓமலூர் சாலையில் அமைந்துள்ள சீயோன் மஹாலில் 
நடைபெற்றது.

நிகழ்ச்சியின் துவக்கமாக சேலம் ஜங்ஷன் பெண்கள் வட்டத்தின் நாஜிமா ஜனாபா :மும்தாஜ் அஜீம் அவர்கள் திருக்குர்ஆன் விரிவுரை நிகழ்த்தினார்.

சேலம் வட்ட பொறுப்பாளர்  ஜனாப் : F. அஸ்லம் அவர்கள் வரவேற்புரையாற்றினார்.

மண்டல அமைப்பாளர்
ஜனாப் : S.A.K.ஜெய்லானி அவர்கள்
தொடக்க உரையாற்றினார். 

அதனைத் தொடர்ந்து ஜமாஅத்தின்  தமிழ்நாடு & புதுச்சேரி மாநில தலைவர் மவ்லவி முஹம்மத் ஹனீஃபா மன்பஈ* அவர்கள்  தலைமை உரையாற்றினார். 

நிகழ்ச்சியின் மையக் கருத்தான வெற்றியின் பக்கம் வாருங்கள் என்ற தலைப்பில்  திருச்சி அஸ்ஸலாம் இஸ்லாமிக் கல்லூரி, பேராசிரியரும் , சிறந்த எழுத்தாளரும் நாடறிந்த பேச்சாளருமான
மவ்லவி முஹம்மது நூஹ் மஹ்ழரி அவர்கள் 
சிறப்புரையாற்றினார். 

மதியம் உணவு மற்றும் தொழுகை இடைவேளைக்குப் பிறகு 

அழைப்புப் பணியும் நமது இலக்கும் என்ற தலைப்பில் இஸ்லாமிய அழைப்பாளர் ஜனாப்: திருப்பூர் M.அன்வர் தீன் அவர்கள் சிறப்புரை ஆற்றினார்.

இதைத் தொடர்ந்து
கோவை ஹிதாயா மகளிர் இஸ்லாமியக் கல்லூரியின் தாளாளர் மவ்லவி முஹம்மத் இஸ்மாயில் இம்தாதி அவர்கள்  இஸ்லாமிய இயக்கத்தின் தனித் தன்மைகள்
என்ற தலைப்பில் சிறப்புரை ஆற்றினார்.

நிகழ்வின் நிறைவுறையாக 
தமிழ்நாடு & புதுச்சேரி மாநில தலைவர்  மவ்லவி முஹம்மத் ஹனீஃபா மன்பஈ அவர்கள் உரையாற்றினார்கள்.

சாலிடாரிட்டி இளைஞர் அமைப்பு மாநில செயலாளர் சகோதரர் : ஜாஃபர் அவர்கள் நன்றி உரையுடன் நிகழ்வு நிறைவுற்றது. அல்ஹம்துலில்லாஹ்....!

இந்த நிகழ்வை சாலிடாரிட்டி இளைஞர் அமைப்பின் சேலம் மாநகர தலைவர் சகோதரர்: முஹம்மது சிராஜ் அவர்கள் சிறப்பாக தொகுத்து  வழங்கினார்.

உறுப்பினர்கள் , ஊழியர்கள் ஆதரவாளர்கள் ஆண்கள் , பெண்கள் என 120 க்கும்
மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

அல்ஹம்துலில்லாஹ்...