ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த்(JIH) உயர்மட்டக் குழு, அதன் தலைவர் சையத் சஆதத்துல்லாஹ் உசைனி அவர்களின் தலைமையில், துணைத் தலைவர்கள் பேராசிரியர் சலீம் இன்ஜினீயர், எஸ். அமீனுல் ஹசன் மற்றும் உதவி தேசியச் செயலாளர் டாக்டர் ரிஸ்வான் ரஃபீக்கி ஆகியோருடன், இந்தியாவிற்கான ஐரோப்பிய ஒன்றியப் பிரதிநிதிக் குழுவின் அரசியல் விவகாரத் தலைவர் மாண்புமிகு கிளாஸ் நேய்மனைச் சந்தித்தார்கள்.
மற்றொரு குழு, ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் துணைத் தலைவர்கள் பேராசிரியர் சலீம் இன்ஜினீயர், மலிக் மொஹ்தசிம் கான் மற்றும் உதவி தேசியச் செயலாளர்கள் டாக்டர் ரிஸ்வான் ரஃபீக்கி, லயீக் அகமது கான் ஆகியோர் புது தில்லியில் உள்ள கம்பியா குடியரசின் தூதரகத்திற்குச் சென்று, மாண்புமிகு உயர்ஸ்தானிகர் முஸ்தபா ஜவாரா, துணைத் தூதரகத் தலைவர் எப்ரிமா எம்பூப் மற்றும் தூதரகத்தின் ஆலோசகர்கள் மற்றும் செயலாளர்களைச் சந்தித்தது.
காசாவில் நடைபெறும் துயரங்களை முடிவுக்குக் கொண்டுவருவதற்கு ஐரோப்பிய ஒன்றியமும், கம்பியா குடியரசு அரசாங்கமும் செயலூக்கமான, உறுதியான மற்றும் அர்த்தமுள்ள வகையில் பங்காற்ற வேண்டும் என இந்தக் குழு வலியுறுத்தியது. இஸ்ரேலிய அட்டூழியங்களை கடுமையாகக் கண்டிப்பதற்கும், பாலஸ்தீன மக்களுக்கு மனிதாபிமான உதவிகளை வழங்குவதற்கும்,
சுதந்திரமான இறையாண்மை கொண்ட பாலஸ்தீன நாட்டை நிறுவுவதற்கும், அழுத்தம் தர வலியுறுத்தி மாண்புமிகு தூதர்கள் மூலம் தொடர்புடைய அதிகாரிகளை இக்குழு வேண்டுகோள் விடுத்து வந்தார்கள்.