News Channel

"பத்திரிக்கை செய்தி"

"பத்திரிக்கை செய்தி"

வைஷ்ணோதேவி பாதையில் நிகழ்ந்த துயரமான நிலச்சரிவு &உயிரிழப்புக்கு ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் (JIH) துணைத் தலைவர் பேராசிரியர் சலீம் என்ஜினியர் அவர்களின் 
ஆழ்ந்த இரங்கல்...

புதுடில்லி: 
ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் (JIH) அகில இந்திய துணைத் தலைவர் பேராசிரியர் சலீம் என்ஜினியர், ஜம்மு & காஷ்மீரின் ரேயாசி மாவட்டம், 
கட்ரா பகுதியில் உள்ள வைஷ்ணோதேவி வழித்தடத்தில் அர்த்குவாரி அருகே ஏற்பட்ட பெரும் நிலச்சரிவில் பலர் உயிரிழந்ததற்கு ஆழ்ந்த துயரமும், பாதிக்கப்பட்டவர்களக்கு 
துணை நிற்ப்போம் என்று தெரிவித்தார்.

தனது அறிக்கையில் பேராசிரியர் சலீம் என்ஜினியர் கூறியதாவது:
"பெரும் மழை காரணமாக ஏற்பட்ட இந்த நிலச்சரிவில் பலர் உயிரிழந்தது மிகுந்த துயரத்தை அளிக்கிறது. 
பலர் காயமடைந்துள்ளனர், 
பல குடும்பங்கள் பேரதிர்ச்சியடைந்துள்ளன. 
சிலர் இன்னும் இடிபாடுகளில் சிக்கியிருக்கலாம் என்ற அச்சமும் நிலவுகிறது. 

உடனடி மீட்பு, நிவாரணம் மற்றும் மறுவாழ்வு நடவடிக்கைகளை விரைந்து, ஒருங்கிணைந்த முறையில் மேற்கொள்ள மத்திய மற்றும் மாநில அரசுகள் தீவிர முயற்சி மேற்கொள்ள வேண்டும் என்பதில் வலியுறுத்துகிறோம்."

இந்த பேரிடருக்கு எதிராக தேசிய பேரிடர் மீட்பு படை (NDRF), மாநில பேரிடர் மீட்பு படை (SDRF), இந்திய இராணுவம், ஜம்மு & காஷ்மீர் போலீஸ் மற்றும் உள்ளூர் தன்னார்வலர்கள் விரைந்து செயல்படுவதை அவர் பாராட்டினார். 

இன்னும் சிக்கியுள்ளவர்களை மீட்பதற்கான நடவடிக்கைகளை வேகப்படுத்தி, காயமடைந்தவர்களுக்கு உடனடி சிகிச்சை வழங்க வேண்டும். 

கட்ரா மக்கள் இந்த துயரத்தில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக உணரக்கூடாது. 
நாடு முழுவதும் உள்ள மக்கள் இந்த நெருக்கடியான நேரத்தில் அவர்களுடன் தோள் கொடுக்க வேண்டும் என்று அவர் கூறினார்.

நீண்டகாலத் தயார்நிலையின் அவசியத்தையும் அவர் வலியுறுத்தினார்:
"நிலச்சரிவு, திடீர் வெள்ளம் போன்ற இயற்கை பேரிடர்களுக்கு அரசு விரிவான பேரிடர் மேலாண்மைத் திட்டத்தையும் தெளிவான நடைமுறை வழிமுறைகளையும் உருவாக்க வேண்டும். பாதிக்கப்பட்ட குடும்பங்களின் நீண்டகால மறுவாழ்வுக்காக சிறப்பு நிவாரணத் திட்டமும் அறிவிக்க வேண்டும் என்றும் பேராசிரியர் சலீம் என்ஜினியர் வலியுறுத்தினார்.