News Channel

மேகவெடிப்பு மற்றும் அதனைத் தொடர்ந்து வந்த வெள்ளப்பெருக்கு...

உத்தரகாசியில், 
உத்தராகண்டில் ஏற்பட்ட மேகவெடிப்பு மற்றும் அதனைத் தொடர்ந்து வந்த வெள்ளப்பெருக்கு காரணமாக உயிரிழப்புகளும்,  பரவலான அழிவுகளும் ஏற்பட்டிருப்பது குறித்து நாங்கள் ஆழ்ந்த கவலையையும், துயரத்தையும் வெளிப்படுத்துகிறோம். 

தாராலி கிராமத்தில் மேகவெடிப்பால் தூண்டப்பட்ட பேரழிவு வெள்ளம், வீடுகள், விடுதிகள் மற்றும் முழு குடியிருப்புகளையும் அடித்துச் சென்று மிகப்பெரிய அழிவை ஏற்படுத்தியுள்ளது. 

இது நம்மனைவருக்கும் ஒரு மாபெரும் சோகமாகும். இன்னும் பலர் இடிபாடுகளில் சிக்கியிருக்கலாம் என்ற அச்சம் நிலவுகிறது.  வரும் நாட்களில் தொடர்ந்து கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளதால்,  மேலும் பாதிப்புகள் ஏற்படலாம் என்ற அச்சம் எழுந்துள்ளது. மத்திய மற்றும் மாநில அரசுகளை உடனடி மீட்பு, நிவாரணம் மற்றும் புனர்வாழ்வு நடவடிக்கைகளை விரைவாகவும் ஒருங்கிணைந்து மேற்கொள்ளுமாறு நாங்கள் வலியுறுத்துகிறோம். இராணுவம், தேசிய பேரிடர் மீட்புப் படை (NDRF), மாநில பேரிடர் மீட்புப் படை (SDRF) மற்றும் பிற அமைப்புகளின் பணியை நாங்கள் பாராட்டுகிறோம். 

இருப்பினும், காணாமல் போனவர்களைக் கண்டறிவதற்கும், வீடுகளை இழந்தவர்களுக்கு உதவுவதற்கும் முயற்சிகளை துரிதப்படுத்த வேண்டிய தேவை உள்ளது.  நாட்டு மக்களை, 
இந்த நெருக்கடியான நேரத்தில் உத்தரகாசி மக்களுடன் ஒற்றுமையாக நிற்குமாறு நாங்கள் வேண்டுகின்றோம். முடிந்த இடங்களில், ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் உறுப்பினர்களும்,
தொடர்புடையவர்களும், நடைபெறும் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளில் தீவிரமாகப் பங்கேற்கவும், உள்ளூர் அதிகாரிகள் மற்றும் சமூக அமைப்புகளுடன் இணைந்து செயல்படவும் தயாராக இருக்கின்றோம்.

பேராசிரியர் சலீம் இன்ஜினீயர்  
துணைத் தலைவர், 
ஜமாஅத்-இ-இஸ்லாமி ஹிந்த்
புது தில்லி.