News Channel

மணப்பாறை ஜமாஅத்தே இஸ்லாமிக் ஹிந்த் கிளையின் சார்பாக கோடைகால பயிற்சி வகுப்புகள்

மணப்பாறை ஜமாஅத்தே இஸ்லாமிக் ஹிந்த் கிளையின் சார்பாக கோடைகால பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டது.

 எல்லாம் வல்ல இறைவன் அருளால் 05.05. 2025 வெள்ளிக்கிழமை அன்று சுமார் பத்து நாட்களாக நடைபெற்ற கோடைகால பயிற்சி வகுப்புகளில் பங்கு பெற்ற மாணவர்களை கௌரவிக்கும் விதமாக அவர்களுக்கு பரிசுப் பொருட்கள் வழங்கப்பட்டன.
 வெள்ளிக்கிழமை ஜும்மா தொழுகையில் சாலிடாரிட்டி அமைப்பின் தலைவர் கமால்
கலந்து கொண்டு சிறப்பு குத்பா உரையாற்றினார்.
 ஜும்மா தொழுகைக்குப் பிறகு கிளையின் தலைவர் ஜபருல்லா மற்றும் சாலிடாரிட்டி அமைப்பின் மாநில தலைவர் மற்றும் மணப்பாறை ஜும்மா பெரிய பள்ளிவாசல் தலைவர் முகமது அனிபா கலந்துகொண்டு கோடைகால பயிற்சி வகுப்பிற்கு வருகை தந்த மாணவர்களுக்கு பரிசு பொருட்களை வழங்கியும் அங்கு நடத்தப்பட்ட போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகளை வழங்கியும் கௌரவித்தனர். சுமார் 30 மாணவர்கள் தொடர்ச்சியாக கோடைகால பயிற்சி வகுப்பில் கலந்து கொண்டு இஸ்லாத்தைப் பற்றி மென்மேலும் அறிந்து கொண்டனர்.