News Channel

போதையில்லா தமிழ்நாடு பேரணி

அஸ்ஸலாமு அலைக்கும் 
கரூர் கிளை சார்பாக 10-09-2026 அன்று காலை "போதை இல்லா தமிழ்நாடு " பரப்புரையின் இறுதி நிகழ்ச்சியாக போதைக்கு எதிரான மக்கள் விழிப்புணர்வு பேரணி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்தப் பேரணி கருர் நகரில் உள்ள தலைமை தபால் நிலையம் தொடங்கி ஜவஹர் பஜார் வழியாக மனோகரா கார்னர் (பழைய பஸ் ஸ்டாண்ட் ) வரை நடைபெற்றது. முன்னதாக இந்நிகழ்ச்சியின் துவக்கமாக சகோதரி. தாரா அவர்கள் திருமறை வசனங்களை ஒதினார். கிளைத் தலைவர் ஹாருன் வரவேற்புரை நிகழ்த்தினார். இதன் பிறகு ஐக்கிய ஜமாத் கூட்டமைப்பின் தலைவர் டாக்டர் நிஜாம் பாபு, தமுமுக நகரத் தலைவர் AR பத்ருதீன், எஸ்டிபிஐ நகரத் தலைவர் பாஷா  மற்றும் வழக்கறிஞர் தமிழ் ராசேந்திரன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். இந்நிகழ்வில் மாறு வேடமிட்ட  குழந்தைகள் கலந்து கொண்டு அவர்களுடைய பேச்சுத் திறனை வெளிப்படுத்தினர்.    போதை மற்றும் மது மற்றும் போதை எதிர்ப்பு  கோஷங்கள் எழுப்பப்பட்டன. ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் மாநிலச் செயலாளர் SN.சிக்கந்தர் அவர்கள் சிறப்புரையாற்றினார்.  11:30 மணிக்கு  மது விலக்குப் பிரிவு மற்றும் அமலாக்கத்துறை (PEW) ஆய்வாளர் திரு. ஹரிஹரன் அவர்கள் அவர்கள் பேரணியை துவக்கி வைத்தார். பேரணியின் இறுதிவரை அவர் நம்முடன் நடந்து வந்து சிறப்பித்தார்.  SN.சிக்கந்தர் அவர்கள் அவருக்கு புத்தகங்கள் அன்பளிப்பாக வழங்கினார். பேரணியின் அமைப்பாளர் ஜஃபருல்லாஹ் அவர்களின் நன்றியுரையுடன் பேரணி நிறைவுப் பெற்றது. இப்பேரணியில் கருர் நகர மக்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர்  கலந்து கொண்டு பேரணிக்கு ஆதரவு தெரிவித்தனர்.
பேரணியில் கலந்து கொண்டவர்களுக்கு தண்ணீர் மற்றும் Juice வழங்கப்பட்டது.