News Channel

சேலம் மது போதைக்கு எதிரான விழிப்புணர்வு பொதுக் கூட்டம்

அன்பிற்கினிய இயக்வழி சகோதர சகோதரிகளே
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்....


சேலம், 26/9/.2026: ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் (JIH) சேலம் மாநகரம் சார்பாக "போதை இல்லா தமிழ்நாடு" என்ற மாபெரும் விழிப்புணர்வு பரப்புரை நிகழ்ச்சி இன்று மாலை சேலம் கோட்டை மைதானத்தில் எழுச்சியுடன் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சிக்கு JIH சேலம் வட்டப் பொறுப்பாளர் ஜனாப். F. அஸ்லம் அவர்கள் தலைமை தாங்கினார். JIH மண்டல அமைப்பாளர் ஜனாப். S.A.K. ஜெய்லானி அவர்கள் வரவேற்புரை மற்றும் துவக்க உரை நிகழ்த்தினார்.


மேலும் இந்நிகழ்வில்,
Dr. C. ஃபிராங்கிளின் ஆசாத் காந்தி (காந்தியவாதி), 
ஜனாப். மு. அப்துல் ரஷீத் (தமஜக),
ஜனாப். A. ஜாபர் சாதிக் (Solidarity),

ஜனாப். S.N. சிக்கந்தர் (மாநில தலைவர், வெல்ஃபேர் கட்சி) ஆகியோர் சிறப்புரையாற்றினர்.

இந்நிகழ்வில் உரையாற்றிய அனைவரும் "போதைப் பழக்கம் இளைஞர்களின் எதிர்காலத்தை அழிக்கிறது, இதுபோன்ற விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் அவசியம்" என்று பேசினார்.


Gio சகோதரி இ.நஷிஹா அவர்கள் உரை
அனைவரையும் கவர்ந்தது. இதனைத் தொடர்ந்து பொதுமக்களிடம் இறுதியில் அனைவரும் போதை ஒழிப்பு உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.

ஆண்கள், பெண்கள் என
100க்கும் மேற்பட்ட மக்கள் கலந்து கொண்டனர்.-


நிகழ்ச்சிக்கு அனுமதி வழங்கிய காவல்துறைக்கும், ஒத்துழைப்பு நல்கிய ஊடக நண்பர்களுக்கும், கலந்து கொண்ட பொதுமக்களுக்கும் உறுப்பினர்கள் ஊழியர்கள் ஆண்கள் பெண்கள் சாலிடாரட்டி இளைஞர் அமைப்பு மற்றும் Sio  நண்பர்கள் JIH வட்ட  சார்பாக  ஜஸாக்கல்லாஹ் ஹைர்

Jih Salem media