கடையநல்லூர் JIH கிளை சார்பாக பண்புப் பயிற்சிப் பட்டறை நிகழ்ச்சி
04/10/2026 (22/ரபியுல் ஆகிர்/1448 ஹி) ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணி முதல் மாலை 4:30 மணி வரை கண்மணியாபுரம் பள்ளிவாசலில் வைத்து, கடையநல்லூர் ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் கிளை சார்பாக உறுப்பினர்கள், ஊழியர்கள், தன்னார்வலர்கள் அனைவருக்கும் *பண்புப் பயிற்சிப் பட்டறை (தர்பிய்யா) நிகழ்ச்சி* நடைபெற்றது.
கிளைத் தலைவர் K. பீர் முஹம்மத் நிகழ்ச்சிக்கு தலைமை ஏற்று சிறப்பாக நடத்தினார்கள். மௌலவி ஆலிம் ஷாகுல் ஹமீது பைஜி அவர்கள் திருக்குர்ஆன் விரிவுரை நிகழ்த்தினார்கள். அதைத்தொடர்ந்து கிளைத் தலைவர் K. பீர் முஹம்மது அவர்கள் பண்புப் பயிற்சியின் முக்கியத்துவம் குறித்து உரையாற்றி அனைவரையும் வரவேற்றார்கள்.
அடுத்ததாக சகோதரர் M.S. ஜபருல்லாஹ் அவர்கள் *"இறைத் தொடர்பு அதன் முக்கியத்துவம்* " என்ற தலைப்பிலும், சகோதரி ஆயிஷா அவர்கள் *"மறுமையை முன்னிறுத்தி வாழப் பழகுங்கள்"* என்ற தலைப்பிலும், சகோதரர் அப்துல் ரஹ்மான் அவர்கள் *"இறைவழியில் கடுமையாக உழையுங்கள்"* என்ற தலைப்பிலும், சகோதரி நாகூர் பானு அவர்கள் *"பெண்களுக்கு சில அறிவுரைகள்* " என்ற தலைப்பிலும் சிறப்பாக உரை நிகழ்த்தினார்கள்.
லுஹர் தொழுகை, மதிய உணவிற்குப் பின்னால் GIO மாணவிகள் சகோதரி தஸ்னீம் அவர்கள் *"பெண்களின் மீது வைக்கப்படும் எதிர்பார்ப்புகள்"* என்ற தலைப்பிலும், சகோதரி வாஃபிகா " அவர்கள் *இஸ்லாத்தில் பெண்ணியம்* " என்ற தலைப்பிலும் சிறப்பாக உரை நிகழ்த்தினார்கள். அதைத் தொடர்ந்து ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்தின் ஆலோசனைக் குழு உறுப்பினரும், சமரசம் இதழின் ஆசிரியருமான V.S. முஹம்மத் அமீன் அவர்கள் தலைமையில் *சகோதர சமுதாய சொந்தங்கள் கேட்கும் கேள்விகளுக்கு எப்படி விடையளிக்க வேண்டும்* என்ற தலைப்பில் குழு கலந்தாய்வு நடைபெற்றது.
இறுதியாக JIH மண்டலப் பொறுப்பாளர் மௌலவி ஆலிம் K.A. அஹ்மத் முஹ்யித்தீன் ஃபைஜி அவர்கள் நிறையுரையாற்றினார்கள். சகோதரர் U.A. முஹம்மத் ரில்வான் அவர்கள் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார்கள் இறுதியாக அவர்களின் நன்றியுரையுடன் நிகழ்ச்சி நிறைவு பெற்றது.இந்நிகழ்ச்சியில் 80க்கும் அதிகமான சகோதர, சகோதரிகள் கலந்து கொண்டார்கள்.