News Channel

கருர் நகர முக்கிய பிரமுகர்களுடன் மாநிலச் செயலாளர் சந்திப்பு நிகழ்ச்சி

JIH கருர் கிளை சார்பில் 10-09-2026 அன்று  மாலை கருர் கிளை ஜமாத் அலுவலகத்தில் கருர் ஐக்கிய ஜமாத் பிரமுகர்கள் மற்றும் பள்ளிவாசல் நிர்வாகிகள் ஆகியோர்களுடன் மாநிலச் செயலாளர் SN சிக்கந்தர் அவர்கள் கலந்து கொண்ட  கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சி "முஸ்லிம் சமுதாயமும் தலைவர்களின் பொறுப்பும் " என்கின்ற கருப்பொருளில் தற்போது தமிழ்நாட்டில் நடந்து வருகின்ற போதை இல்லா தமிழ்நாடு பிரச்சாரம் குறித்தும் முஸ்லிம் சமுதாயத்தில் அதிகரித்து வரும் போதைப் பொருட்களின் பயன்பாடு குறித்தும் விவாதிக்கப்பட்டது. கூட்டு ரீதியாக இந்த சமூகத் தீமையினை ஒழிக்க பாடுபட வேண்டும் என்று அனைவரும் தங்கள் கருத்துக்களை முன் வைத்தனர்.இந்த நிகழ்ச்சி மிகவும் ஆக்கப்பூர்வமாக அமைந்தது.கலந்து கொண்டவர்கள் அனைவரும் சமூகத்தின் அவல நிலையைக் குறித்து மிகவும் வேதனைப்பட்டனர்

இந்நிகழ்ச்சியில் மாநில செயலாளர் உடன் கிளைத் தலைவர் ஹாருன் மற்றும் உறுப்பினர் ஜஃபருல்லாஹ் ஆகியோர் கலந்து கொண்டனர்.