Drug-Free Tamil Nadu Awareness Outreach Conducted in Thuvarankurichi
As part of the ‘Drug-Free Tamil Nadu’ campaign, Jamaat-e-Islami Hin....
“இந்தப் பார்வையின்போது நாங்கள் கண்ட காட்சிகளும், கேட்டறிந்த தகவல்களும் மிகுந்த மனவேதனையை ஏற்படுத்துகின்றன. இந்தச் சோகச் சம்பவத்தை வெறுமனே எதிர்பாராத கட்டட விபத்து எனக் கூறி எளிதாகக் கடந்துவிட முடியாது. இதற்கான பொறுப்புடைமை உறுதி செய்யப்பட வேண்டும்.உயிரிழந்த மாணவர்களின் குடும்பங்களுக்கு உரிய நிவாரணமும் இழப்பீடும் வழங்கப்பட வேண்டும். கட்டடம் இடிந்து விழுந்ததற்கான காரணங்கள் குறித்து வெளிப்படையான விசாரணை நடத்தப்பட வேண்டும். அலட்சியம், விதிமீறல்கள் அல்லது கண்காணிப்புக் குறைபாடுகளுக்குக் காரணமானவர்கள் மீது தயவுதாட்சண்யமின்றி பொறுப்பு நிர்ணயிக்கப்பட்டு உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.”
“டெல்லி பல்கலைக்கழகம் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் நிலவும் கடுமையான மாணவர் தங்குமிட நெருக்கடியையே இந்தச் சோகம் உணர்த்துகிறது. கல்லூரிகளில் போதுமான விடுதி வசதிகள் இல்லாததால், வெளிமாநிலங்களில் இருந்து கல்வி கற்க வரும் பல்லாயிரக்கணக்கான மாணவர்கள் தனியார் வாடகை வீடுகளையும், பேயிங் கெஸ்ட் (PG) தங்குமிடங்களையும் நாட வேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப்படுகின்றனர்.இத்தகைய தீவிரமான தங்குமிடத் தேவையைப் பயன்படுத்தி, அளவுக்கு அதிகமான மாணவர்கள் நெருக்கடியாகவும், போதிய பாதுகாப்பற்ற கட்டடங்களிலும் தங்க வைக்கப்படும் சூழல் உருவாகியுள்ளது.எனவே, மாணவர்களுக்குத் தேவையான தரமான மற்றும் மலிவு விலையிலான விடுதி வசதிகளை மேம்படுத்த அரசும் சம்பந்தப்பட்ட நிர்வாக அமைப்புகளும் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.அதேவேளையில், சத்ய நிகேதன் போன்ற மாணவர்கள் அதிகம் வசிக்கும் பகுதிகளில் இயங்கி வரும் விடுதிகள் மற்றும் தனியார் PG கட்டடங்களில் உடனடியாக கட்டட உறுதித்தன்மைத் தணிக்கை (Structural Audit) மற்றும் விரிவான பாதுகாப்பு ஆய்வுகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.தங்குமிடத் தேவையைக் காரணம் காட்டி, பாதுகாப்பு விதிமுறைகள், அவசரகால வெளியேறும் வழிகள், கட்டட அனுமதிகள் மற்றும் அத்தியாவசியப் பாதுகாப்பு நெறிமுறைகளில் எந்தவித சமரசத்தையும் ஒருபோதும் அனுமதிக்க முடியாது.”
“இந்தக் கோர விபத்தைக் கண்டித்தும், நியாயமான கோரிக்கைகளை முன்வைத்தும் போராடி வரும் மாணவர் அமைப்புகளுக்கும் பொதுமக்களுக்கும் எங்களது முழுமையான ஆதரவைத் தெரிவிக்கிறோம்.அவர்களின் நியாயமான கோரிக்கைகளைக் கண்டுகொள்ளாமல் புறக்கணிக்காமல், அதிகாரிகள் உடனடியாகக் காதுகொடுத்துக் கேட்க வேண்டும். போராடும் மாணவர்களுடன் பேசி, அவர்களின் அச்சங்களையும் தேவைகளையும் கேட்டறிந்து, உறுதியான தீர்வுகளை மேற்கொள்ளுமாறு அரசையும் அதிகாரிகளையும் கேட்டுக்கொள்கிறோம்.ஒழுங்குமுறை குறைபாடுகள், நிறுவனக் கட்டமைப்புப் பற்றாக்குறை அல்லது வணிக ரீதியான சுயநலன்களுக்காக இளம் மாணவர்களின் உயிர்களை ஆபத்துக்குள்ளாக்க முடியாது.இதுபோன்ற தடுக்கக்கூடிய பேரிடர்கள் மேலும் இளம் உயிர்களைப் பறித்துவிடாத வகையில், இந்தச் சம்பவத்திற்குரிய பொறுப்புடைமையை நிலைநாட்டுவதோடு மட்டுமல்லாமல், கட்டமைப்பு ரீதியான சீர்திருத்தங்களையும் தீவிரமாகச் செயல்படுத்த வேண்டும்.”
As part of the ‘Drug-Free Tamil Nadu’ campaign, Jamaat-e-Islami Hin....
மங்கலம் மது போதைக்கு எதிரான விழிப்புணர்வு பரப்புரை இயக்கம் தெருமுனை....
போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு மாரத்தானில் ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந....
கிருஷ்ணகிரி அறிஞர் அண்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நடைபெற்ற ....