News Channel

Drugs Awareness Marathon 2026 – 2.5 KMS Fun Run

சென்னை:
ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் – சென்னை மெட்ரோ, Associate Partner ஆக இணைந்து, Kondattam Events நடத்திய “Drugs Awareness Marathon 2026 – 2.5 KMS Fun Run” நிகழ்வில் பங்கேற்றது.
மாணவர்கள், இளைஞர்கள் மற்றும் பொதுமக்களிடையே போதைப்பொருள் பயன்பாட்டின் தீமைகள் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில் நடைபெற்ற இந்நிகழ்விற்கு, ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் – சென்னை மெட்ரோ சார்பில் கல்வி மற்றும் விழிப்புணர்வு சார்ந்த புத்தகங்கள் வழங்கப்பட்டு ஆதரவு அளிக்கப்பட்டது.
இந்நிகழ்வில் ‘போதையில்லா தமிழ்நாடு’ அமைப்பின் கன்வீனர் அஜ்மல் அவர்கள் கலந்து கொண்டு, மாதவரம் சட்டமன்ற உறுப்பினர் திரு. M.L. விஜய்பிரபு அவர்களைச் சந்தித்து, போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் இளைஞர்களின் எதிர்காலம் குறித்து கலந்துரையாடினார்.
போதைப்பொருளுக்கு எதிரான விழிப்புணர்வுப் பணிகளுக்கு ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் – சென்னை மெட்ரோ வழங்கிய ஆதரவையும் பங்களிப்பையும் பாராட்டும் வகையில், Kondattam Events சார்பில் Certificate of Appreciation வழங்கப்பட்டது.
இளைஞர்களை போதைப்பொருள் பழக்கத்திலிருந்து பாதுகாத்து, ஆரோக்கியமான மற்றும் பொறுப்புணர்வுமிக்க எதிர்காலத்தை உருவாக்குவதற்கான விழிப்புணர்வுப் பணிகளில் ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் தொடர்ந்து பங்களிக்கும்.