பத்திரிகைச் செய்தி
தமிழகத்தின் முக்கியப் பிரச்சினைகள் குறித்து ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் பத்திரிகையாளர் சந்திப்பு!
சென்னை, அக்டோபர் 29, 2026, வியாழக்கிழமை:
ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் தமிழ்நாடு & புதுச்சேரி சார்பில், இன்று காலை 11 மணியளவில் மாநிலத் தலைமையகத்தில் பத்திரிகையாளர் சந்திப்பு நடைபெற்றது.
தமிழகத்தில் பொதுமக்களைப் பாதிக்கும் முக்கியப் பிரச்சினைகளாகக் கருதப்படும் நான்கு தலைப்புகள் இச்சந்திப்பில் முன்னிலைப்படுத்தப்பட்டன.
1. திரைப் போதையில் திண்டாடும் தமிழ்நாடு!
2. காணாமல் போன மாணவர் மன்றங்கள்!
3. பேராபத்தில் பள்ளிவாசல்கள்; வடநாட்டில் தொடரும் பெருந்துயரம்!
4. மழை, வெள்ளம், மண்சரிவுகள்: பரிதவிக்கும் மலைப் பிரதேசங்கள்!
ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் தமிழ்நாடு & புதுச்சேரி மாநிலத் தலைவர் மௌலவி A. முஹம்மது ஹனிபா மன்பயீ அவர்கள் கலந்துகொண்டு தொடக்க உரையாற்றினார்.
தொடர்ந்து, பத்திரிகையாளர்கள் பல்வேறு முக்கியப் பிரச்சினைகள் குறித்து கேள்விகளை எழுப்பினர். அவற்றில் முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தொடர்பான ஊழல் குற்றச்சாட்டு மற்றும் கைது குறித்த செய்திகள், போதைப்பொருள் கடத்தலில் தமிழக வெற்றிக் கழகத்தைச் சேர்ந்தவர்களுக்கு இருப்பதாகக் கூறப்படும் தொடர்புகள், கோவையில் சாதிப் பெயரால் அவமதிக்கப்பட்டதாகக் கூறப்படும் அகிலன் என்ற மாணவரின் தற்கொலை, தமிழகத்தில் தொடர்ந்து எழுப்பப்படும் சட்டம்–ஒழுங்கு தொடர்பான கவலைகள் ஆகியவை இடம்பெற்றன.
மேலும், வடபழனி மற்றும் கோயம்பேடு பள்ளிவாசல்கள் மீதான தாக்குதல் சம்பவங்கள், கடுமையான விலைவாசி உயர்வு, மின் தட்டுப்பாட்டைச் சமாளிக்க அதிக விலை கொடுத்து மின்சாரம் வாங்குவது, தேனியில் சிறைக் கைதிகள் தப்பிய விவகாரம், குழந்தைகள் மற்றும் சிறுமிகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள், ஆர்.எஸ்.எஸ். பேரணிக்கு அனுமதி வழங்கப்பட்ட விவகாரம், தமிழக மின்சார வாரியத்தில் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகள் வழங்கப்பட்டமை உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்தும் கேள்விகள் எழுப்பப்பட்டன.
பத்திரிகையாளர்கள் முன்வைத்த அனைத்துக் கேள்விகளுக்கும் மாநிலத் தலைவர் விரிவாகப் பதிலளித்தார்.
இந்நிகழ்வில் மாநிலத் துணைத் தலைவர்கள் கே. எம். சிராஜ் அஹ்மத், ஐ. ஜலாலுதீன், மாநில அமைப்புச் செயலாளர் கே. ஜலாலுதீன், மாநில ஆலோசனைக் குழு உறுப்பினர்கள் டி. அஜீஸ் லுத்புல்லாஹ், எஸ். என். சிக்கந்தர் மற்றும் மாநில மகளிர் அணிச் செயலாளர் சகோதரி பாத்திமா ஜலால் ஆகியோர் கலந்துகொண்டனர்.
மேலும், பல்வேறு தொலைக்காட்சி நிறுவனங்களின் நிருபர்கள், பத்திரிகையாளர்கள் மற்றும் யூடியூப் ஊடகங்களைச் சேர்ந்தவர்களும் பங்கேற்றனர். நிகழ்வில் கலந்துகொண்ட பத்திரிகையாளர்கள் அனைவருக்கும் பத்திரிகைச் செய்திகள் அச்சுப் பிரதிகளாக வழங்கப்பட்டன.
இந்நிகழ்வை ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் மாநில ஊடகச் செயலாளர் எஸ். சாகுல் ஹமீது ஒருங்கிணைத்து வழிநடத்தினார்.