News Channel

மங்கலம் மது போதைக்கு எதிரான விழிப்புணர்வு தெருமுனை கூட்டம்

அன்பானவர்களே..! அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)

ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் மங்கலம் கிளை சார்பில் மது போதை இல்லா தமிழ் நாடு விழிப்புணர்வு பரப்புரை இயக்க தெருமுனை கூட்டம் 13:09:2026 ஞாயிற்றுக்கிழமை மாலை 5 மணியளவில் பல்லடம் சாலை யூனியன் வங்கி முன்பு நடைபெற்றது . இந்த கூட்டத்திற்கு ஜமாஅத் மங்கலம் கிளை தலைவர் ஜனாப்: அப்துல் வதூத் அவர்கள் தலைமை தாங்கினார். மங்கலம் அனைத்து இஸ்லாமிய ஜமாத் கூட்டமைப்பு நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர். வெல்ஃபேர் கட்சியின் திருப்பூர் மாவட்ட தலைவர்  M. முஹம்மது ரிஜ்வான் அவர்கள் துவக்க உரையாற்றினார். ஜமாத் மங்கலம் கிளை செயலாளர் ஜனாஅப்.A.அப்துல் ரஷீத் அவர்கள் வரவேற்புரை நிகழ்த்தினார். அதனைத் தொடர்ந்து SDPI கட்சி மற்றும் காயிதே மில்லத் அறக்கட்டளை நிர்வாகிகள் உரை நிகழ்த்தினார்கள். 

வெல்ஃபேர் கட்சியின் மாநில பொதுச் செயலாளர் வழக்கறிஞர் IM.சாதிக் அவர்கள் சிறப்புரையாற்றினார். ஜமாத் மேற்கு மண்டல அமைப்பாளர் ஜனாப் S.A.K.ஜெய்லானி அவர்கள் நிறைவுரையாற்றினார். இந்த கூட்டத்தில் 50க்கும் மேற்பட்ட ஆண்கள் பெண்கள் திரளாக கலந்து கொண்டனர்...

JIH MANGALAM