"பத்திரிக்கையாளர் சந்திப்பு"
ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் தமிழ்நாடு & புதுச்சேரி சார்பாக 24.09.2026 இன்று காலை 11.30 மணியளவில் மாநில தலைமையகத்தில் பத்திரிக்கையாளர் சந்திப்பு நடைபெற்றது.
இந்நிகழ்வில், மாநில அளவில் பொதுமக்களிடையே முக்கியத்துவம் பெற்றுள்ள நான்கு முக்கியப் பிரச்சினைகள் தேர்வு செய்யப்பட்டு, அவை தொடர்பான ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்தின் நிலைப்பாடுகள் ஊடக நண்பர்களிடம் விரிவாக எடுத்துரைக்கப்பட்டன.
விவாதிக்கப்பட்ட முக்கியத் தலைப்புகள்:
1. மாணவர்களின் நலனுக்காக தமிழக அரசால் விரிவுபடுத்தப்பட்டுள்ள காலை உணவுத் திட்டத்திற்கு வரவேற்பு
2. மதுராந்தகம் மற்றும் தாராபுரம் சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல்
3. தொடரும் மின்வெட்டும், பொதுமக்களைப் பதற்றமடையச் செய்யும் அதிகரித்த மின் கட்டணமும்
4. பால் தட்டுப்பாடு — தொடரும் பேரவலம்
மேற்கண்ட நான்கு தலைப்புகள் தொடர்பான ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்தின் நிலைப்பாடுகள் மற்றும் கவலைகள் குறித்து விரிவாக விளக்கப்பட்டது.
இந்நிகழ்வில் ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் தமிழ்நாடு & புதுச்சேரி மாநிலத் தலைவர் மௌலவி A. முஹம்மது ஹனீபா மன்பயீ அவர்கள் கலந்துகொண்டு, மேற்கண்ட நான்கு முக்கியப் பிரச்சினைகள் குறித்த ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்தின் நிலைப்பாடுகளை விரிவாக எடுத்துரைத்தார்.
நிருபர்களின் கேள்விகள்
மாநிலத் தலைவரின் உரையைத் தொடர்ந்து, ஊடக நண்பர்கள் பல்வேறு கேள்விகளை முன்வைத்தனர்.
அவற்றில் சில:
- மதுராந்தகம் மற்றும் தாராபுரம் இடைத்தேர்தலில் ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் யாருக்கு ஆதரவு அளிக்கிறது?
- தொடரும் மின்வெட்டு தொடர்பாக ஏதேனும் போராட்டம் நடத்தத் திட்டமிட்டுள்ளீர்களா?
- மின்வெட்டுக்கு முந்தைய ஆட்சிக் காலத்தில் அதிகாரிகள் மேற்கொண்ட நடவடிக்கைகளே காரணம் என்று அமைச்சர்கள் கூறுவது குறித்து உங்கள் கருத்து என்ன?
- UPA பரிவர்த்தனை தொடர்பாக நீங்கள் கூறுவது என்ன?
- தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் மீது குற்றச்சாட்டுகளை முன்வைத்து, முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பதவி விலக வேண்டும் என்று கூறப்பட்டுள்ள நிலையில், இதுகுறித்து உங்கள் கருத்து என்ன?
- நேற்று காலை உணவு சாப்பிட்ட மாணவர்கள் மயக்கமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள சம்பவம் குறித்து உங்கள் கருத்து என்ன?
- JEM கி. வீரமணி தொடர்பாக முன்வைக்கப்பட்டுள்ள பாலியல் குற்றச்சாட்டுகள் குறித்து உங்கள் கருத்து என்ன?
- பல்கலைக்கழகம் தொடங்குவதற்காக முதலில் 100 ஏக்கர் நிலம் என்று கூறப்பட்ட நிலையில், தற்போது 12 ஏக்கராகக் குறைக்கப்பட்டிருப்பது குறித்து உங்கள் கருத்து என்ன?
- சிறுபான்மை முஸ்லிம் மாணவர்கள் வெளிநாடுகளில் கல்வி பயில்வதற்கான வாய்ப்பில் தற்போது 10 மாணவர்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படுவதாகக் கூறப்படும் நிலையில், அந்த எண்ணிக்கையை அதிகரிக்க முயற்சி மேற்கொள்ளப்படுமா?
- வட்டியில்லாக் கடன் வழங்குவதற்காக தமிழக அரசு ரூ.100 கோடியை வக்ஃப் வாரியத்திடம் வழங்கியுள்ள திட்டத்தை எவ்வாறு பார்க்கிறீர்கள்?
என ஊடக நண்பர்கள் பல்வேறு கேள்விகளை முன்வைத்தனர்.
மேற்கண்ட அனைத்து கேள்விகளுக்கும் மாநிலத் தலைவர் மௌலவி A. முஹம்மது ஹனீபா மன்பயீ அவர்கள் விரிவாகப் பதிலளித்தார்.
இந்நிகழ்வில்-
மாநிலத் துணைத் தலைவர்கள்:
T. யூசுப் பாஷா
K. M. சிராஜ் அஹ்மத்
மாநில அமைப்புச் செயலாளர்:
K. ஜலாலுதீன்
மாநில ஊடகச் செயலாளர்:
S. சாகுல் ஹமீது
மாநிலச் செயலாளர்கள்:
T. அஜீஸ் லுத்புல்லாஹ்
V. S. முஹம்மது அமீன்
S. N. சிக்கந்தர்
பாத்திமா ஜலால் ஆகியோரும்
மேலும், 25-க்கும் மேற்பட்ட ஊடக நண்பர்கள், தொலைக்காட்சி நிருபர்கள், எழுத்தாளர்கள், யூடியூபர்கள் மற்றும் பார்வையாளர்கள் கலந்துகொண்டனர்.
பல்வேறு முக்கியமான பொதுப் பிரச்சினைகள் தொடர்பாக ஊடக நண்பர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு விரிவான விளக்கங்கள் அளிக்கப்பட்டதுடன், பத்திரிக்கையாளர் சந்திப்பு நிகழ்ச்சி இனிதே நிறைவுற்றது.