News Channel

வட்டமேசை மாநாடு மதுரை



மதுரை JiH ஆகஸ்ட் 26ஆம் தேதி, ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் – மதுரை சார்பாக, மாநில அளவிலான “போதை இல்லா தமிழ்நாடு” பிரச்சாரத்தை முன்னிட்டு, கிருஷ்ண ஐயர் மஹாலில் வட்டமேசை அமர்வு நடைபெற்றது.

இதில் ஜமாஅத் ஊழியர்கள், உறுப்பினர்கள், ஆசிரியர்கள், மருத்துவர்கள், உளவியல் நிபுணர்கள், ஆளுமைகள், SIO மற்றும் GIO உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் கலந்து கொண்டு, தங்கள் துறைகளில் போதைப்பொருளால் ஏற்படும் தாக்கம் மற்றும் அதற்கான தீர்வுகள் குறித்து கலந்துரையாடினர்.

இதில் போதைக்கு எதிராக குழுக்கள் அமைக்கப்பட்டு, தொடர்ந்து போதைக்கு எதிராக செயல்பட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.