கிருஷ்ணகிரி:
ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் கிருஷ்ணகிரி கிளையின் சார்பாக, ‘போதையில்லா தமிழ்நாடு’ பரப்புரையின் ஒரு பகுதியாக, மது போதைக்கு எதிரான விழிப்புணர்வு விளக்கக் கூட்டம் 11.09.2026 வெள்ளிக்கிழமை காலை 10.30 மணி முதல் மதியம் 12.15 மணி வரை அறிஞர் அண்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் சிறப்பாக நடைபெற்றது.
நிகழ்விற்கு அறிஞர் அண்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் முதல்வர் டாக்டர் S. தனபால், M.Sc., M.Phil., Ph.D. அவர்கள் தலைமை தாங்கி வாழ்த்துரை வழங்கினார். ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் கிருஷ்ணகிரி நகரத் தலைவர் ஜனாப் சிபகத்துல்லாஹ் அவர்கள் முன்னிலை வகித்தார்.
போதைப்பொருள் குற்றங்கள் மற்றும் சட்ட நடவடிக்கைகள்
சிறப்பு அழைப்பாளர்களாகக் கலந்து கொண்ட மது விலக்கு அமல் பிரிவு காவல் ஆய்வாளர் திரு. N. ஜெகன்நாத் மற்றும் சிறப்பு உதவி காவல் ஆய்வாளர் திரு. N. கண்ணன் ஆகியோர், போதைப்பொருள் தொடர்பான குற்றங்கள், அவற்றுக்கான சட்டரீதியான தண்டனைகள் மற்றும் பொதுமக்கள் கடைப்பிடிக்க வேண்டிய வழிகாட்டுதல்கள் குறித்து விளக்கமாக எடுத்துரைத்தனர்.
மதுவால் ஏற்படும் உடல்நலப் பாதிப்புகள்
டாக்டர் M. ஆபித், MBBS, DNB, DM (Neuro) அவர்கள், மதுப் பழக்கத்தால் ஏற்படும் உடல் மற்றும் நரம்பியல் பாதிப்புகள் குறித்து அறிவியல் பூர்வமாகவும் விரிவாகவும் விளக்கினார்.
தனிமனிதன் முதல் தேசம் வரை ஏற்படும் பாதிப்புகள்
சாலிடாரிட்டி இளைஞர் அமைப்பின் மாநிலத் தலைவர் M. முஹம்மத் ரியாஸ், MA, MBA அவர்கள், மதுப் பழக்கத்தால் தனிமனிதர், குடும்பம், சமூகம் மற்றும் தேசம் எதிர்கொள்ளும் பல்வேறு பாதிப்புகள் மற்றும் இன்னல்களில் இருந்து விடுபட்டு மீள்வதற்கான வழிமுறைகள் குறித்து ஆழமான கருத்துகளைப் பகிர்ந்துகொண்டார்.
நிகழ்வின் இறுதியில், பங்கேற்ற அனைவரும் போதைக்கு எதிரான உறுதிமொழியை எடுத்துக்கொண்டனர்.
இந்நிகழ்வில் கல்லூரி ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் மாணவிகள் என சுமார் 150 பேர் கலந்து கொண்டனர்.
சிறப்பு விருந்தினர்கள், ஆசிரியர்கள் மற்றும் மருத்துவருக்கு நினைவுக் கேடயங்களும், ‘போதை அழிவின் பாதை’ என்ற விழிப்புணர்வு நூலும் வழங்கப்பட்டன.
நிகழ்வின் இறுதியில் சகோதரர் இப்ராஹிம் அவர்கள் நன்றி கூறினார்.
எல்லாப் புகழும் இறைவனுக்கே!