News Channel

ராபிததுல் உலமா - ஆலிம்களுக்கான சிறப்பு நிகழ்ச்சி

15/09/2026 / 03/ரபியுல் ஆகிர்/1448 ஹி 
 செவ்வாய்க்கிழமை 
காலை 9:30 மணி முதல் 11:30 வரை

கடையநல்லூர் பைஜூல் அன்வார் அரபிக் கல்லூரியில் வைத்து ராபிததுல் உலமா & ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்து கடையநல்லூர் கிளை சார்பாக

 ஆலிம்களுக்கான சிறப்பு நிகழ்ச்சி கடையநல்லூர் ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்தின் கிளைத் தலைவர் K. பீர் முஹம்மது, மற்றும் உறுப்பினர்கள், ஊழியர்கள் முன்னிலையில் நடைபெற்றது. 

ஆரம்பமாக மௌலவி ஆலிம் சாகுல் ஹமீதி ஃபைஜி அவர்கள் கிராத் ஓதினார்கள். 
அடுத்து மௌலவி ஆலிம் K.A. அஹ்மத் முஹ்யித்தீன் ஃபைஜி அவர்கள் அனைவரையும் வரவேற்று ராபிதாவின் நோக்கத்தைப் பற்றி விளக்கினார்கள். 

அதைத் தொடர்ந்து தென்காசி மாவட்ட காழியும், பைஜூல் அன்வார் அரபிக் கல்லூரியின் முதல்வருமான
மௌலவி ஆலிம் A.Y. முஹ்யித்தீன் ஃபைஜி, ஃபாஜில் ரஷாதி அவர்கள் வாழ்த்துரை வழங்கினார்கள். 

ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்தின் மாநிலத் தலைவரும், ராபிததுல் உலமாவின் காப்பாளருமான மௌலவி ஆலிம் முஹம்மத் ஹனிஃபா மன்பயி அவர்கள் தலைமையுரையாற்றினார்கள். 

அஸ்ஸலாம் இஸ்லாமியக் கல்லூரியின் பேராசிரியரான மௌலவி ஆலிம் முஹம்மது நூஹ் மஹ்ழரி அவர்கள் "சமூக சீர்திருத்தப் பணியில் ஆலிம்களின் பங்கு" என்ற தலைப்பில் சிறப்புரையாற்றினார்கள். 

இறுதியாக ஜமாத்தின் உறுப்பினர் முஹம்மத் ரில்வான் அவர்கள் நன்றியுரையாற்றினார்கள். 

மௌலவி ஆலிம் V.S. முஹம்மது முஸம்மில் புகாரி அவர்கள் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார்கள். 
இந்த நிகழ்ச்சியில் கடையநல்லூர் வட்டார ஆலிம்கள் 60 பேர்கள் கலந்து கொண்டார்கள்.
எல்லாப் புகழும் இறைவனுக்கே !!!