கட்டுரை போட்டியும் & மீலாது நபி சிறப்பு நிகழ்ச்சி
அணைக்கரைபட்டியில் மாபெரும் கட்டுரை போட்டி சிறப்பு நிகழ்ச்சி
ஜமா அத்தே இஸ்லாமி ஹிந்த் (JIH) ஊழியர் வட்டம் மற்றும் அணைக்கரைப்பட்டி முஸ்லிம் ஜமாத் சார்பாக அணைக்கரை பட்டியில் உள்ள ஊர் சாவடியில் பொது நிகழ்ச்சியாக நடைபெற்றது.
மீலாது நபி சிறப்பு நிகழ்ச்சியை சிறப்பிக்கும் விதமாக
கட்டுரை போட்டி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன.
அக்டோபர் 27 முதல் நவம்பர் 5 ஆம் தேதி வரை கட்டுரை போட்டியில் கலந்து கொள்வதற்கான அவகாசம் வழங்கப்பட்டன.
கட்டுரை போட்டியின் தலைப்பாக 'நான் கண்ட முஹம்மது நபிகளார் (ஸல்)' என்கின்ற தலைப்பில் கட்டுரை எழுதி தர வேண்டும் என்றும் கட்டுரைப் போட்டிக்கான புத்தகம் அணைக்கரைப்பட்டி ஜும்ஆ பள்ளிவாசலில் இலவசமாக வழங்கப்படும் என அறிவிப்பு செய்யப்பட்டது .
கிட்டத்தட்ட சுமார் 80 க்கும் மேற்பட்ட சகோதர சமுதாய சொந்தங்கள் இந்த கட்டுரை போட்டியில் பங்கெடுத்தனர்.
8 /11 /2023 அன்று மீலாது நபி சிறப்பு நிகழ்ச்சியும் 'நான் கண்ட முஹம்மது நபிகளார்' கட்டுரை போட்டிக்கான பரிசளிப்பு விழாவும் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் அணைக்கரைப்பட்டி ஜும்ஆ பள்ளிவாசலின் இமாம் ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் ( JIH ) உறுப்பினருமான, இமாம் சர்தார் பாஷா அவர்கள் சிறப்புரை நிகழ்த்தினார் .
உரையின் வாயிலாக வருகை புரிந்த சகோதர சமுதாய சொந்தங்களுக்கு அண்ணல் நபிகளாரை அறிமுகப்படுத்தும் விதமாகவும். நபியவர்கள் முஸ்லிம்களுக்கு மட்டும் சொந்தமான இறைத்தூதர் அல்ல ஒட்டுமொத்த மனித குலத்திற்க்கும் உரிமை உடையவர்கள் என்பதை நபியவர்களின் வாழ்வில் நடந்த பல நிகழ்வுகளை எடுத்துக் கூறியும் அவருடைய நற்குணத்தை நினைவு கூர்ந்தும் பல செய்திகள் எடுத்துரைக்கப்பட்டன.
நிகழ்ச்சியின் இறுதியில் கட்டுரை போட்டியில் பங்கெடுத்தவர்களை தேர்வு செய்து அதில் மூன்று நபர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.
முதல் பரிசு மனோஜ் ரூ . 2000/-
இரண்டாவது பரிசு ஈஸ்வரி ரூ . 1500/-
மூன்றாவது பரிசு தர்ஷினி ரூ. 1000/-
ரொக்க பணம்
பரிசாக வழங்கப்பட்டன.
இந்நிகழ்ச்சியில் முஸ்லிம்கள், சகோதர சமுதாயத்தை சார்ந்தவர்கள், இளைஞர்கள், மாணவ- மாணவிகள் என சுமார் 150 நபர்கள் கலந்து கொண்டனர்.