News Channel

துவக்க விழா

ஹிதாயா மகளிர் இஸ்லாமியக் கல்லூரி துவக்க விழா வேலூரில் சிறப்பாக நடைபெற்றது
வேலூர்: அல்லாஹ்வின் அளப்பெரும் கிருபையினால், வேலூர் மாநகரில் நிறுவப்பட்டுள்ள ஹிதாயா மகளிர் இஸ்லாமியக் கல்லூரி துவக்க விழா 18-08-2025 திங்கட்கிழமை காலை 10.30 மணிக்கு இஸ்லாமிக் சென்டர் வளாகம், மதார் சாஹெப் தெரு, R.N. பாளையத்தில் இனிதே நடைபெற்றது.
இவ்விழாவிற்கு ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த், தமிழ்நாடு & புதுச்சேரி தலைவர் மவுலவி முஹம்மத் ஹனீஃபா மன்பயீ அவர்கள் தலைமை தாங்கி நடத்தினார்.
முன்னிலையில் மவுலவி அப்ஜலுல் உலமா M.I. முஹம்மத் சித்தீக் உமரி மதனி, M.A., M.Com., முதல்வர், குலியத்துஸ் ஸலாம் அரபிக் கல்லூரி, திருச்சி அவர்கள் பங்கேற்று உரையாற்றினார்.
சிறப்பு விருந்தினர்களாக –
  • ஆலிஜனாப் அல்ஹாஜ் V.K. அப்துல் அலீம் சாஹிப் B.A., தலைவர், வேலூர் மஸாஜித் அசோசியேஷன்
  • Dr. ஹாபிஸ் மவுலவி பஷீருல் ஹக் குரைஷி M.A., Ph.D., பேராசிரியர், தாருல் உலூம் லத்தீபியா கல்லூரி, வேலூர்
  • முஃப்தி, ஹாபிஸ் கதீப் அஹ்மத் சயீத் பாகவி, Govt. Khazi, வேலூர் மாவட்டம் & Secretary, Jamiat Ulama Tamil Nadu
  • ஜனாப் C. துஃபைல் அஹ்மத் சாஹிப், General Secretary, Islamic Centre, Vellore
  • ஜனாப் I. ஜலாலுத்தீன், M.Sc., M.Phil., (Ph.D.), Secretary & Correspondent, Goodword Public School, Chennai
    ஆகியோர் பங்கேற்று வாழ்த்துரைகள் வழங்கினர்.
இந்த கல்லூரியின் துவக்கம், வேலூர் மாநகரில் இஸ்லாமிய மகளிர் கல்வி வளர்ச்சிக்கான ஒரு முக்கியமான கட்டமாகவும், எதிர்கால தலைமுறைக்குப் பெரிய நன்மையாகவும் இருக்கும் என்று அனைவரும் பாராட்டினர்.