சுதந்திர தினத்தில் தியாகிகளை நினைவு கூர்ந்த குழந்தைகள்.
நீலகிரி மாவட்ட GIO சார்பாக 79 வது சுதந்திர தின சிறப்பு நிகழ்ச்சி (சுதந்திர தினத்தன்று 15:08:2025 ) குன்னூரில் நடைபெற்றது.
இந்திய வரலாற்றில் சுதந்திரத்திற்காக பாடுபட்ட முன்னோர்களின் வரலாறுகளை குழந்தைகள் தெரிந்து கொள்ள வேண்டும் என்னும் அடிப்படையில் நிகழ்ச்சி நடத்தப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில் கட்டுரைப் போட்டி, பேச்சுப்போட்டி, ஓவியப்போட்டி, மற்றும் இந்திய சுதந்திரத்திற்காக உழைத்த தியாகிகளின் உருவத்தை நினைவில் வைக்க வேண்டும் என்னும் அடிப்படையில் மாறுவேட போட்டியும் நடைபெற்றது.
இதில் ஏராளமான குழந்தைகள் ஆர்வத்தோடு கலந்து கொண்டனர்.
மேலும் அனைத்து போட்டிகளிலும் தங்களது திறமையை வெளிப்படுத்தினர் குழந்தைகள். நிகழ்ச்சியில் பங்கெடுத்த அனைத்து குழந்தைகளுக்கும் நினைவு பரிசு வழங்கப்பட்டது.
இந்த நிகழ்ச்சியை சிறப்பான முறையில் GIO நிர்வாகிகள் ஏற்ப்பாடு செய்திருந்தனர்.