2025 - கல்வி உதவி & வழிக்காட்டுதல் வழங்கும் நிகழ்ச்சி
ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் (JIH), பாலக்கரை வட்டம் சார்பில் கல்வி உதவி & வழிக்காட்டுதல் வழங்கும் நிகழ்ச்சி 20.08.2025 அன்று இரவு 7.30 மணிக்கு காஜா பேட்டை பென்ஷனர் மஸ்ஜித்தில் நடைப்பெற்றது.
இந்நிகழ்ச்சியில் ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த், திருச்சி கிளைத் தலைவர் முனைவர். A. ஹஜ் மொய்தீன், சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார். அவர் பேசுகையில், “மாணவர்கள் கல்வி கற்பதுடன், ஒழுக்கத்தையும் பேண வேண்டும். இப்பகுதியில் வாழும் மாணவர்கள் கல்வி கற்று உயர்ந்த இடத்திற்கு செல்ல வேண்டும். அதே நேரத்தில் நற்பண்புகள் கொண்ட மனிதர்களாக உருவாக வேண்டும். இதில் பெற்றோர்கள் அதிக கவனம் செலுத்த வேண்டும். பிள்ளைகளை நல்வழிப்படுத்த வேண்டிய முதல் பொறுப்பு பெற்றோர்களுக்கு உண்டு. பிள்ளைகளுக்கு முன்மாதிரியாக அவர்கள் திகழ வேண்டும்.” என்று அறிவுறுத்தினார்.
அதைத் தொடர்ந்து, பொருளாதாரத்தில் மிகவும் பின்தங்கிய குடும்பத்தைச் சார்ந்த 51 மாணவ மாணவியர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டது. இதில் தாய் தந்தையை இழந்து பள்ளி மற்றும் கல்லூரியில் படிக்கும் மாணாக்கர்களும் அடங்குவர். ஜமாஅத் தொடர்ந்து அப்பகுதி மக்களிடையே கல்வி விழிப்புணர்வை ஏற்ப்படுத்துவதுடன், பல வகைகளில் உதவிகள் செய்து வருகிறது.
இந்நிகழ்ச்சியில், ஜமாஅத் திருச்சி கிளைச் செயலாளர்கள் மரு. சேக் மொய்தீன், முனைவர். அப்துல் ரஜாக், ஜனாப். நவாஸ்கான், முனைவர். முஹம்மது ரஃபிக், ஜமாஅத் ஆதரவாளர்கள் ஹாஜி. முஹம்மது யூனூஸ், முனைவர். அனீஸ் அஹமது, முனைவர். ஹிதாயத்துல்லாஹ் மற்றும் காஜாப் பேட்டை பென்ஷனர் மஸ்ஜித் இமாம் மெளலவி. முஹம்மது இக்ரிமா, தலைவர் ஜனாப். அம்ஜத் கான், செயலாளர் மற்றும் நிர்வாகிகள் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.
மேலும், மாணவ மாணவிகள், பெற்றோர்கள் என 70 க்கும் மேற்ப்பட்டோர் கலந்துகொண்டு பயனடைந்தனர். நிகழ்ச்சி ஏற்பாட்டினை சகோ. பக்கீர் முஹம்மது தலைமையில் பாலக்கரை ஊழியர்கள் சிறப்பாக செய்திருந்தினர். வல்ல இறைவன் நம் பணிகளை ஏற்றுக் கொள்வானாக! இம்மையிலும் மறுமையிலும் அளப்பரிய கூலியை வழங்குவானாக!
புகழனைத்தும் அல்லாஹ் ஒருவனுக்கே.