இஸ்லாமிய அமைப்புகளின் கூட்டு பிரதிநிதிக் குழு இந்தியாவில் உள்ள பிரான்ஸ் தூதரகத்தின் அரசியல் ஆலோசகர் திரு. ஷத் ஜொய்னல் அபேதீனை சந்தித்தது.
பிரதிநிதிக் குழு, காசாவில் நடைபெறும் துயரங்களை முடிவுக்கு கொண்டுவருவதற்கு பிரான்ஸ் அரசு உறுதியான மற்றும் அர்த்தமுள்ள வகையில்
பங்காற்ற வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.
இந்தியாவில் உள்ள அமைதி மற்றும் நீதியை விரும்பும் குடிமக்கள் மற்றும் இஸ்லாமிய அமைப்புகள் சார்பாக, தூதரகம் மூலம் பிரான்ஸ் அரசுக்கு பின்வரும் கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன:
1. *நடைபெறும் வன்முறை குறித்து உறுதியான நீதி நிலைப்பாடு எடுக்கவும்*: காசாவில் பொதுமக்கள் மற்றும் பொதுமக்களின் உட்கட்டமைப்பு மீதான தாக்குதல்கள் உள்ளிட்ட பாகுபாடு இல்லாத வன்முறைகள் குறித்து கடும் கவலை தெரிவிக்கும் பகிரங்க அறிக்கையை வெளியிட வேண்டும். இவை சர்வதேச மனிதாபிமான சட்டத்தை மீறுவதாகவும், நெருக்கடியை மேலும் ஆழப்படுத்துவதாகவும் உள்ளன.
2. இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவுக்கு எதிரான சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் கைது உத்தரவை ஆதரிக்கவும், பாலஸ்தீன பிரதேசங்களில் இஸ்ரேலின் சட்டவிரோத ஆக்கிரமிப்பை முடிவுக்கு கொண்டுவர ஐக்கிய நாடுகள் பொதுச்சபையின் அழைப்பை ஆதரிக்கவும்.
3. *இஸ்ரேலுடனான உறவுகளை துண்டிக்கவும்*: இஸ்ரேல் சர்வதேச சட்டங்களுக்கு இணங்கி, காசாவில் தனது ஆக்கிரமிப்பை நிறுத்தும் வரை, இஸ்ரேலுடனான இராணுவ, பொருளாதார மற்றும் இராஜதந்திர தொடர்புகளை நிறுத்தி வைக்கவும்.
4. *மனிதாபிமான உதவிகளை வழங்கவும்*: ஐக்கிய நாடுகளின் நிவாரண மற்றும் பணி முகமையான (UNRWA) உள்ளிட்ட நிவாரண முயற்சிகளுக்கு கணிசமான வளங்களை ஒதுக்கவும், உணவு, தண்ணீர், எரிபொருள் மற்றும் மருத்துவப் பொருட்களை வழங்குவதற்கு மனிதாபிமான பாதைகளை உடனடியாக திறக்க வேண்டும் என்று வாதிடவும்.
5. *பாலஸ்தீன மக்களின் உரிமைகள் மற்றும் சுயநிர்ணயத்தை ஆதரிக்கவும்*: ஆக்கிரமிப்பை எதிர்க்கவும், தங்களது பிரதிநிதிகள் மூலம் தங்கள் விவகாரங்களை நிர்வகிக்கவும், கண்ணியம், இறையாண்மை மற்றும் தங்கள் எதிர்காலத்தை தாங்களே தீர்மானிக்கும் உரிமையை உறுதி செய்யவும், சர்வதேச சட்டத்தால் அங்கீகரிக்கப்பட்ட பாலஸ்தீன மக்களின் உரிமையை உயர்த்திப் பிடிக்க வேண்டும்.
பிரதிநிதிக் குழுவில் பின்வருவோர் இடம்பெற்றனர்:
- சையத் சஆதாதுல்லாஹ் ஹுசைனி (தேசியத் தலைவர், ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த்),
- டாக்டர் SQR இல்யாஸ் (செய்தி தொடர்பாளர் AIMPLB),
- மவுலானா மொஹம்மத் நதீம் சித்திகி சல்பி (தலைவர், மர்கஸி ஜமியத் அஹ்லே ஹதீஸ், டெல்லி),
- மொஹம்மத் ஷஃபி மத்னி (தேசியச் செயலாளர், ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த்),
- வழக்கறிஞர் அனீஸ் உர் ரஹ்மான் (பொதுச் செயலாளர், SIO ஆஃப் இந்தியா)
- டாக்டர் ரிஸ்வான் ரஃபீகி (தேசிய உதவிச் செயலாளர், ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த்).