News Channel

"சபாநாயகருடன் சந்திப்பு"

"சபாநாயகருடன் சந்திப்பு"
ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் முன்னாள் மாநிலத் தலைவரும்,
மத்திய ஆலோசனைக் குழு உறுப்பினரும், இந்திய பொருளாதார மையத்தின் (ICIF) பொதுச் செயலாளருமான
H. அப்துர் ரகீப் அவர்கள்,
தமிழ்நாடு சட்டமன்றச் சபாநாயகர்
திரு. ஜே.சி.டி. பிரபாகரன் அவர்களை நேரில் சந்தித்தார்.
இந்த சந்திப்பின் போது, இந்திய பொருளாதார மையத்தின் (ICIF) செயல்பாடுகள் மற்றும் இஸ்லாம் தொடர்பான பல்வேறு கருத்துக்கள் குறித்து விரிவாக கலந்துரையாடப்பட்டது.
நீண்ட நேரம் நடைபெற்ற இந்த பயனுள்ள சந்திப்பின் நிறைவாக, சபாநாயகர் அவர்களுக்கு சமரசம் இதழ் மற்றும் இஸ்லாமிய நிறுவனம் டிரஸ்ட் (IFT) வெளியிட்ட நூல்கள் அன்பளிப்பாக வழங்கப்பட்டன.
இந்த சந்திப்பும் கலந்துரையாடலும் மிகவும் மகிழ்ச்சிகரமாகவும் பயனுள்ளதாகவும் அமைந்தது.