கோடைகால இஸ்லாமிய வகுப்பு
நிறைவு நாள் நிகழ்ச்சி
10 -5 -26 ஞாயிற்றுக்கிழமை மாலை 5 மணிக்கு ஆரம்பமானது.
முதலாவதாக GIO மாணவி ஃபர்ஹானா அவர்கள் கிராஅத் ஓதினார்.
ஜமாஅத் தே இஸ்லாமி ஹிந்த் மகளிரணி நாஜிமா சகோதரி ஹம்ஸா பேகம் அவர்கள் *Journey to JANNAH* என்ற தலைப்பில் சிறப்புரை ஆற்றினார்.
GIO President மாணவி AR Suhaina அவர்கள் GIO குறித்து அறிமுக உரையாற்றினார்.
GIO members associates Get together A Blissful day of sisters and smiles one day தர்பியா நிகழ்வில் கலந்து கொண்ட மாணவிகளுக்கு ஊக்கப்பரிசுகள் வழங்கப்பட்டது.
இடைவேளைக்குப்பிறகு GIO associate மாணவி நூருல் ஹிதாயா அவர்கள் பாடல் பாடினார்.
அதனைத்தொடர்ந்து ஜமாஅத் தே இஸ்லாமி ஹிந்த் திருப்பூர் மாநகரத் தலைவர் ஜனாப் முஹம்மது காசிம் அவர்கள் நிறைவுரையாற்றினார்.
இறுதியாக பயிற்சி வகுப்பில் கலந்து கொண்ட மாணவிளுக்கு பரிசுகள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.
15 நாட்கள் கோடைக்கால இஸ்லாமிய வகுப்பை சிறப்பாக நடைபெறுவதற்காக ஒத்துழைப்பு கொடுத்த GIO members மற்றும் மகளிரணி பொறுப்பாளர்களுக்கு ஊக்கப்பரிசாக shield வழங்கப்பட்டது.
GIO மாணவி உம்மு ஸல்மா அவர்கள் நன்றியுரையாற்றினார்
இந்நிகழ்ச்சியை GIO மாணவி ஜுல்ஃபியா அவர்கள் சிறப்பாக தொகுத்து வழங்கினார்.
இந்த 15 நாட்களில் மாணவிகளை பயிற்றுவிக்கும் நோக்கத்தில்
Good deed hunt நற்செயல்கள் 12 கொடுக்கப்பட்டிருந்தது அதனை தினந்தோறும் ஒவ்வொருவரிடமும் தனித்தனியாக கேட்டு points வழங்கப்பட்டது.
இதன் தாக்கங்களாக
பெற்றோர்கள் கூறியது
இவ்வகுப்பில் கலந்து கொண்ட நாட்களில் மாணவிகள் தொழுகை குறித்த நேரத்தில் தொழுதனர்.குறிப்பாக சில குழந்தைகள் தஹஜ்ஜத் தொழுதனர்.
குர்ஆன் மொழிபெயர்ப்பு டன் படித்ததாகக் கூறினர்
வீட்டு வேலைகள் செய்து கொடுத்தனர்.
ஒரு மாணவி தான் சேர்த்து வைத்த பணத்தில் ஒரு ஏழைக்கு 5 கிலோ அரிசி வாங்கிக் கொடுத்தார்.
யார் என்றே தெரியாதவர்களுக்காக துஆ செய்தனர்.
தங்கள் இறப்பு வரை இதே போன்று நற்செயல்களை செய்தால் நன்றாக இருக்கும்.
தகவல்
GIO Tirupur Media