"வட்டியில்லா வங்கி முறையை வலியுறுத்திய சந்திப்புகள்"
தமிழ்நாட்டில் வட்டியில்லா வங்கி சேவைகள் (Interest-free Banking) அறிமுகப்படுத்தப்பட வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தும் நோக்கில் முக்கிய சந்திப்புகள் நடைபெற்றன.
தமிழ்நாடு அரசின் புதிய நிதித்துறைச் செயலாளராக பொறுப்பேற்றுள்ள
திரு. சித்திக் IAS அவர்களை சந்தித்து வாழ்த்து தெரிவித்தோம்.
அப்போது, வங்கிகளில் வட்டியில்லா சேவைக்கான சிறப்பு வாயில்களை உருவாக்குவது, வட்டியில்லா பங்கேற்பு பரஸ்பர நிதிகள் மற்றும் சுகூக் போன்ற முதலீட்டு நிதிகளை மாநிலத்தின் உட்கட்டமைப்பு மேம்பாட்டிற்காக அறிமுகப்படுத்துவது குறித்து முதல்வர் வழியாக மத்திய அரசிடம் வலியுறுத்துமாறு கேட்டுக்கொண்டோம்.
மேலும், இதற்காக மலேசியாவின் அனுபவத்தையும் ஒத்துழைப்பையும் பயன்படுத்தலாம் என்ற கருத்தையும் முன்வைத்தோம்.
அதனைத் தொடர்ந்து, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் புதிய சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சரான
திரு. ஷாஜஹான் அவர்களை சந்தித்து வாழ்த்து தெரிவித்தோம். வட்டியில்லா வங்கி முறைக்கு அவர் ஆதரவு வழங்க வேண்டும் என கேட்டுக்கொண்டதுடன், ‘சமரசம்’ மற்றும் IFT வெளியீடுகளையும் அறிமுகப்படுத்தினோம்.
மேலும்,
மாண்புமிகு சட்டமன்ற சபாநாயகர் அவர்களை சந்தித்து,
திரு. முருகன் எழுதிய ‘வட்டியில்லா வங்கி முறை’ குறித்த தமிழ் கட்டுரையை வழங்கினோம்.
இறுதியாக,
பாத்திமா முசஃபர் அவர்களின் தலைமையில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மகளிரணி பிரதிநிதிகளுடன் பயனுள்ள மற்றும் இனிய கலந்துரையாடல் நடைபெற்றது.
வட்டியில்லா வங்கி முறை என்பது ஒரு சமூகநீதிசார்ந்த பொருளாதார மாற்றத்திற்கான அவசியமான முயற்சி என்பதையும், அதற்கான விழிப்புணர்வும் ஆதரவும் தொடர்ந்து உருவாக்கப்பட வேண்டும் என்பதையும் இந்த சந்திப்புகள் வலியுறுத்தின.
இந்த பிரதிநிதிக் குழுவில்
இந்திய பொருளாதார மையம் ICIF
பொதுச் செயலாளர்
H. அப்துர் ரகீப்
மலேசியாவில் இஸ்லாமிய வங்கி தொடர்பான டிப்ளமோ பெற்றுள்ளவரும், ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் சென்னை மெட்ரோ தலைவர்
திரு. என். அத்தாவுல்லாஹ் மற்றும்
சமூக ஆர்வலரும் மூத்த செயற்பாட்டாளருமான
திரு. ஜான் முஹம்மது ஆகியோர் கலந்து கொண்டனர்.