22/02/1447 (17/08/2025)
ஞாயிறு மாலை ஹிதாயத்துல் இஸ்லாம் பள்ளிக்கூடத்தில் வைத்து கடையநல்லூர் ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் கிளை சார்பாக சங்கமம் வட்டியில்லா சொசைட்டி அறிமுக நிகழ்ச்சி
ஜமாஅத்தின் கிளைத் தலைவர் ஜனாப் K. பீர் முஹம்மது அவர்களின் தலைமையில் நடைபெற்றது.
இந்நிகழ்வின் துவக்கமாக ஜமாத்தே இஸ்லாமி ஹிந்த் உறுப்பினர் சகோதரர். அப்துல் ரஹ்மான் அவர்கள் திருக்குர்ஆன் வசனங்களை ஓதி துவக்கி வைத்தார்.
ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் மண்டல பொறுப்பாளர் மௌலவி K.A. அஹ்மத் முஹ்யித்தீன் ஃபைஜி வரவேற்புரை நிகழ்த்தினார்கள்..
தென்காசி மாவட்ட அரசு காழி &,ஃபைஜுல் அன்வார் அரபிக் கல்லூரி முதல்வர் மௌலவி A Y முஹ்யித்தீன் ஃபைஜி அவர்கள் வாழ்த்துரை வழங்கினார்கள்.
சங்கமம் விருதுநகர் கிளை மேனேஜர் S. அப்துஸ்ஸமது அவர்கள், .
சங்கமம் மல்டி ஸ்டேட் கோ-ஆப்பரேட்டிவ் கிரிட் சொசைட்டியின் இயக்குனர் M. ஷாகுல் ஹமீது அவர்கள், ,
சங்கமம் மல்டி ஸ்டேட் கோ-ஆப்பரேட்டிவ் கிரிட் சொசைட்டியின் சேர்மன் N. அமானுல்லா MCA, M. Tech,
சங்கமம் செயல்பாடுகள் அதன் பயன்கள் பற்றி உரை நிகழ்த்தினார்கள். இன்னும் சங்கமம் பற்றிய கேள்விகளுக்குத் தெளிவான விளக்கங்கள் கொடுக்கப்பட்டது.
இறுதியாக் ஜஃபருல்லாஹ் நன்றி உரை நிகழ்த்தினார்.
இந்நிகழ்ச்சியை முஹம்மது ரில்வான் சிறப்பாக வழி நடத்தினார்.
நிகழ்வில் சுமார் 100க்கும் மேற்பட்ட ஆண்களும் பெண்களும் கலந்து கொண்டார்கள்.