News Channel

மண்ணில் கைகள் இந்தியாவில் இதயங்கள் CIO பரப்புரையின் நிறைவு விழா

20/02/1447 (15/08/2025) 
வெள்ளிக்கிழமை.மாலை .
கடந்த ஜுன் 25 முதல் *மண்ணில் கைகள் இந்தியாவில் இதயங்கள் CIO பரப்புரையின்  நிறைவு விழா கடையநல்லூர் ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் கிளை அலுவலகத்தில் நடந்தது..

மசூது தைக்கா நர்சரி பள்ளி தலைமை ஆசிரியை ஜனாபா. ரசூல் பீவி தலைமை தாங்கி விழாவை சிறப்பித்தார்கள். ..

GIO மாணவி ஜஸீனா வின் இனிய கிராஅத்துடன் நிகழ்ச்சி துவங்கியது..

குழந்தைகளின் கவிதை, சிறிய உரை,  திருக்குர்ஆன் வசனங்களுடன் நிகழ்ச்சி மிகச் சிறப்பாக நடந்தது..

 ஓவியப்போட்டியில் கலந்து கொண்ட குழந்தைகளுக்கு சான்றிதழும், புத்தகங்களும் அன்பளிப்பு செய்து தலைமை ஆசிரியை வாழ்த்துக்களைத் தெரிவித்தார்.. 
வரும் காலங்களில் மரங்களை நட்டுப் பராமரிப்பதாகக் குழந்தைகள் உறுதிமொழி எடுத்தனர்.

இந் நிகழ்ச்சியின் இறுதியில் சகோதரி ஆபிதா நன்றியுரை நிகழ்த்தினார்..