News Channel

வெற்றியின் பக்கம் வாருங்கள் சாலிடாரிட்டி தெருமுனைப் பிரச்சாரம்

வெற்றியின் பக்கம் வாருங்கள் தெருமுனை பிரச்சாரம்

ஆகஸ்ட் 16/2025 சனிக்கிழமை அன்று உடுமலை கிளை சாலிடாரிட்டி இளைஞர் அமைப்பு சார்பில் மாலை 4 மணியளவில் சாதிக்நகர் பகுதியில் மக்களை "வெற்றியின் பக்கம் வாருங்கள்" என்ற மையக்கருத்தில் தெருமுனைக் கூட்டம் நடைப்பெற்றது.

இந்த கூட்டத்திற்கு உடுமலை சாலிடாரிட்டி கிளைத் தலைவர் சகோதரர்: ஜஹாங்கீர் அவர்கள் தலைமை தாங்கினார். 
ஜமாஅத் கிளைத் தலைவர் ஜனாப்: சான் பாட்ஷா அவர்கள் முன்னிலை வகித்தார்.

சாலிடாரிட்டி மாநில ஆலோசனை குழு உறுப்பினரும் கிளைச் செயலாளருமான சகோதரர்: ஷாநவாஸ் அவர்கள் திருமரை வசனங்களை ஓதி நிகழ்ச்சியை துவக்கினார்.

சாலிடாரிட்டி கோவை மண்டல பொறுப்பாளர் ஹபீப் ரஹ்மான் தலைமையுரையாற்றினார்.

அதன் பிறகு ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் மண்டல அமைப்பாளர் S.A.K.ஜெய்லானி அவர்கள் வெற்றியின் பக்கம் வாருங்கள் என்ற மையக் கருத்தில் சிறப்புரையாற்றினார்.

உரையின் கருத்தாக
இறைவனின் மீது முழுமையான நம்பிக்கை வைக்க வேண்டும். அந்த நம்பிக்கை நமது செயல்களில் மிளிர வேண்டும். அடிப்படை கடமையான தொழுகையை முழுமையாக கடைபிடிக்க வேண்டும். தொழுகைதான் இறைவனுக்கும் நமக்குமான நெருக்கத்தை அதிகரிக்கும் அந்த இறைநெருக்கம் தான் நம்மை வெற்றியின் பக்கம் அழைத்துச்செல்லும் என்ற மையக் கருத்தில் உரை அமைந்திருந்தது.

இந்த கூட்டத்தில் ஆண்கள், பெண்கள், இளைஞர்கள் என 100க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

மேலும் அந்தப் பகுதி பொதுமக்கள் சுமார் 50 க்கும் மேற்ப்பட்டவர்கள் தங்களது இல்லங்களின் முன்பும் , வீட்டு மாடிகளில் நின்று கொண்டும் உரையை கேட்டனர்.  

இறுதியாக சாலிடாரிட்டி கிளை தலைவர் ஜஹாங்கீர் நன்றி உரையுடன் நிகழ்வு நிறைவடைந்தது.