News Channel

சுதந்திர தின சிறப்பு நிகழ்ச்சி ஜமாஅத் மகளிர் அணியினர் பங்கேற்பு

79 வது சுதந்திர தின சிறப்பு நிகழ்ச்சி மகளிர் அணியினர் பங்கேற்பு

உடுமலை 15.08.2025 வெள்ளிக்கிழமை 
SSA சாதிக்நகர் அரசுப் பள்ளியில் சுதந்திர தின விழா நடைப்பெற்றது.

பள்ளியின் தலைமை ஆசிரியர் அவர்கள் சுதந்திர தின நிகழ்ச்சியை  தலைமை ஏற்று நடத்துமாறு ஜமாஅத் மகளிர் அணியினருக்கு அழைப்பு கொடுத்திருந்தார்கள்.

அவர்களின் 
இந்த அழைப்பை ஏற்று ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் மகளிர் அணியினர் கலந்துகொண்டு சுதந்திர தின நிகழ்ச்சியை சிறப்பாக நடத்தினர்.

நிகழ்ச்சியில் உடுமலை ஜமாஅத் மகளிர் அணி தலைவி சகோதரி  A.மெஹராஜ்  அவர்கள் ஒழுக்கமே உண்மையான சுதந்திரம் என்ற தலைப்பிலும், 

ஜமாஅத் ஊழியர் வட்ட பொறுப்பாளர் சகோதரி ஆயிஷா அவர்கள் சுதந்திர போராட்டத்தில் கலந்து கொண்ட முஸ்லிம் வீரர்கள் என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்.

அதன் பிறகு 
மாணவ மாணவிகளுக்கு விளையாட்டு போட்டிகள் நடத்தி பரிசுகளும்  வழங்கப்பட்டது.

இந்த சிறப்பான நிகழ்வில் உடுமலை கம்யூனிட்டி ஆர்கனைசர்  மணிமேகலை,
நகரமன்ற உறுப்பினர்கள் மற்றும் மகளிர் உதவி குழு உறுப்பினர்கள், ஜமாஅத்தின் ஊழியர்கள் , ஆதரவாளர்கள், GIO உறுப்பினர்கள் மற்றும் மாணவர்களின் பெற்றோர்களும் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைவருக்கும் உடுமலை ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் சார்பில் இனிப்புகள் மற்றும் சமரசம், உதய தாரகை பத்திரிகைகள் வழங்கப்பட்டது.