News Channel

மதுரை மாநகர CIO

02.08.2025 சனிக்கிழமை மதியம் 2.30 மணியளவில் மதுரை மாநகர மகளிர் காவல் ஆய்வாளர் திருமதி. சங்கீதா பூபாலன் அவர்கள் கொடியசைத்து குழந்தைகளது பேரணியை துவக்கி வைத்தார்.பேரணி மதுரை கலெக்டர் ஆபீஸ் எதிரில் இருந்து புறப்பட்டது. குழந்தைகள் உற்சாகமாக பதாகைகள் ஏந்தி மரங்களை காப்போம் கோஷமிட்டவாறு காந்தி மியூசியம் நிறைவுவிழா அரங்கம் வந்து சேர்ந்தனர். CIO மாணவி ஷிஃபா கிராஅத் ஓதி நிகழ்ச்சியை துவக்கி வைத்தார். பரப்புரை கன்வீனர் சகோதரி ஷப்னம் ஆலிமா வரவேற்புரையாற்றினார். மதுரை மாநகர மகளிர் பொறுப்பாளர் சகோதரி நஜ்மா சுல்த்தானா ஆலிமா தலைமையுரையாற்றினார்.காவல் ஆய்வாளர் திருமதி சங்கீதா பூபாலன் குழந்தைகளை வாழ்த்தி குழந்தைகளது பாதுகாப்புக்கான சில வழிமுறைகளை அறிவுரைகளையும் வழங்கினார்.அடுத்து குழந்தைகள் மனோவியல் நிபுணர் முனைவர். ராணி சக்கரவர்த்தி Phd அவர்கள் வாழ்த்துரை வழங்கினார்கள். குழந்தைகளது கலைநிகழ்ச்சியாக மரங்கள் பற்றிய கவிதை, பாடல்களை பாடினர் 90 வகையான மரங்களின் பெயர்களை 4 CIO மாணவிகள் கூறினார்கள்.
மரங்களாகவே மாறி சில குழந்தைகள் மரங்களை பாதுகாக்க வேண்டுகோள் வைத்தனர்மரங்கள் இல்லாவிட்டால்மனிதர்களுக்கும்பறவைகளுக்கும் என்ன இழப்பு என்பதை அழகாக அருமையாக mime show மூலமாக குழந்தைகள் உணர்த்தினர். சென்னை உயர்நீதிமன்றம் மதுரைக்கிளை
மூத்த வழக்கறிஞர் திருT.லஜபதிராய் ML அவர்கள் வாழ்த்துரை வழங்கினார். மரங்கள் பற்றிய புத்தகம் எழுதியுள்ளதாகவும், குழந்தைகளுக்கு அந்த புத்தகத்தை அன்பளிக்க விரும்புவதாகவும் குறிப்பிட்டார். வாழ்த்துரை வழங்கிய சிறப்பு அழைப்பாளர் களுக்கு பரப்புரை நினைவுப்பரிசு குழந்தைகள் வழங்கினார்கள். ஜமாஅத் தே இஸ்லாமி ஹிந்த் CIO மாநிலச் செயலாளர் சகோதரர் சலீம் ஸாஹிப் சிறப்புரையாற்றினார். இன்றையக் குழந்தைகள் நாளைய தலைவர்கள் இல்லை இன்றைய தலைவர்கள் தான் சமுதாயப்பொறுப்புணர்வுடன் வளர வேண்டும் என குறிப்பிட்டார். பரப்புரைமுன்னிட்டு குழந்தைகளுக்கு நடத்த பட்ட ஓவியப்போட்டி இறுதிச்சுற்றில் கலந்து கொண்ட எல்லாக்குழந்தைகளுக்கும் சான்றிதழ் வழங்கப்பட்டது. முதல் மூன்று இடங்களை பிடித்த குழந்தைகளுக்கு பரிசுப்பணமும் சான்றிதழும் வழங்கப்பட்டது. GIO Zac member சகோதரி ஸாஜிதா உறுதிமொழி உரைக்க அனைவரும் உறுதிமொழி எடுத்தனர். மதுரை மாநகரமகளிர் துணை பொறுப்பாளர் சகோதரி மெஹர்நிஸா வழிநடத்தினார். மதுரை மாநகர CIO பொறுப்பாளர் சகோதரி நூர்நிஸா நன்றியுரையாற்ற நிகழ்ச்சி இனிதே நிறைவு பெற்றது.