News Channel

இஸ்லாத்திற்கு எதிரான வெறுப்பும் (Islamophobia) முஸ்லிம்களின் கடமையும்

இஸ்லாத்திற்கு எதிரான வெறுப்பும் முஸ்லிம்களின் கடமையும் எனும் தலைப்பில் சிறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது (Islamophobia)

ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் கிருஷ்ணகிரி கிளையின் சார்பாக 08.08.2025 வெள்ளிக்கிழமை மக்ரிப் தொழுகை முதல் இஷா தொழுகை வரை பூரா மஸ்ஜிதில் அல்லாஹ்வின் கிருபையால் மிகச் சிறப்பாக நடைபெற்றது.

நிகழ்வின் தொடக்கமாக பூரா மஸ்ஜித் இமாம் மௌலவி உவேஸ் அஹமத் மாதனி கிராத் ஓதினார்.

பூரா மஸ்ஜித் தலைவர் ஜனாப் ஜாவித் பாஷா தலைமை தாங்கினார்‌.

டாக்டர் முஹையுதீன் MBBS, MS,MCH,(uro) அவர்கள் நூஹ் நபி காலத்தில் இருந்து இன்று வரை இஸ்லாத்திற்கு எதிரான பிரச்சாரம் அதை தீர்ப்பதற்கு நபிமார்கள் வருகை மற்றும் நாம் செய்ய வேண்டிய பணிகள் குறித்து வரலாற்று பிண்ணனி உடன் விளக்கமாக எடுத்துரைத்தார்.

நிகழ்ச்சியை 
மௌலவி இஸ்மாயில் ஃபலாஹி  வழி நடத்தினார்.

இறுதியாக துவா உடன் நிறைவுற்றது.

எல்லா புகழும் இறைவனுக்கே