News Channel

ரிஃபா சேம்பர் ஆஃப் காமர்ஸ் துவக்க விழா நிகழ்ச்சி

கும்பகோணம் ரிஃபா சேம்பர் ஆஃப் காமர்ஸ் துவக்க விழா நிகழ்ச்சி 
நாள்: 10.08.2025 (ஞாயிற்றுக்கிழமை)
நேரம்: காலை 7:00 மணி முதல் 9:30 மணி வரை
இடம்: LILAC HOTEL

கும்பகோணம் ரிஃபா சேம்பர் ஆஃப் காமர்ஸ் ஏற்பாட்டில் நடைபெற்ற நிகழ்ச்சி திட்டமிட்டபடி, காலை 7:30 மணிக்கு துவங்கப்பட்டது.

மௌலவி முகமது இஸ்மாயில் அவர்கள் கிராத் ஓதிப், நிகழ்ச்சியைத் துவக்கி வைத்தார்கள்.
அதனைத் தொடர்ந்து, ஜமாத்தே இஸ்லாமி ஹிந்த் கும்பகோணம் கிளை தலைவர் ஜனாப் அப்துல் கலாம் ஆசாத் அவர்கள் வரவேற்புரை ஆற்றினார்கள்.

அதன்பின், பங்கேற்ற அனைவரும் தங்களது Self Introduction வழங்கினர், இதன் மூலம் ஒருவருக்கொருவர் நெருக்கமாக அறிமுகமானனர்.

நிகழ்ச்சியை ஜனாப் முஹம்மது யூனுஸ் அவர்கள் திறம்பட வழிநடத்தினார்.
“RIFAH – ஏன்? எதற்கு?” என்ற தலைப்பில், தமிழ்நாடு RIFAH தலைவர் ஜனாப் யூனுஸ் சேட் அவர்கள் விரிவாக உரையாற்றினர்.

திருச்சியில் இருந்து வந்திருந்த விருந்தினர்கள், திருச்சி ரிஃபா சேம்பர் ஆஃப் காமர்ஸ் சார்பில் தங்களது அனுபவங்களை பகிர்ந்து கொண்டனர். அவர்களில் சிலர், திருச்சி ரிஃபா சேம்பர் மூலம் வணிக வாய்ப்புகள் கிடைத்தது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்தனர்.

திருச்சி ரிஃபா சேம்பர் ஆஃப் காமர்ஸ் தலைவர் ஜனாப் ஷாஜகான் அவர்களும், செயலாளர் காஜா மைதீன் அவர்களும் தங்களது அனுபவங்களை விரிவாக பகிர்ந்துகொண்டனர்.

நிறைவுரை ரிஃபா சேம்பர் ஆஃப் காமர்ஸ் தமிழ்நாடு பிரசிடெண்ட் ஜனாப் யூனுஸ் சேட் அவர்கள் உரையாற்றினார்.

செயற்குழு உறுப்பினர்கள் நியமனம்:

ஜனாப் முகமது சித்தீக் – மாஸ் மொபைல்

ஜனாப் ராஜா முஹம்மது – ஆற்காடு என்டர்பிரைசஸ்

ஜனாப் ஆசிக் இஸ்மாயில் – ஆடிட்டர்

ஜனாப் சகாபுதின் – நூரா டிராவல்ஸ்

ஜனாப் ஹாஜா மாலிக் – லீசாஃப் எண்டர்பிரைசஸ்

ஜனாப் அப்துல் கலாம் ஆசாத் – சுமையா ரெஸ்டாரன்ட்

ஜனாப் முகமது யூனுஸ் – அஹமது ஸ்டீல் பேப்ரிகேஷன்

நன்றி உரையை, ஜனாப் ஹாஜா மாலிக் அவர்கள் வழங்கினர்.

இந்த நிகழ்ச்சியில் மொத்தம் 53 நபர்கள் பங்கேற்றனர். அனைவரும் மிகுந்த உற்சாகத்துடன் கலந்து கொண்டு, “கும்பகோணம் ரிஃபா சேம்பர் ஆஃப் காமர்ஸ் தொடர்ந்து செயல்பட வேண்டும், நாங்கள் ஆதரவளிக்கிறோம்” என்று உறுதி தெரிவித்தனர்.

நிகழ்ச்சி நிறைவில், காலை சிற்றுண்டி அனைவருக்கும் வழங்கப்பட்டது.