News Channel

தீன் நகரில் பரப்புரை நிறைவு விழா





நிறைவு விழா

மண்ணில் கைகள் இந்தியாவின் இதயங்கள்  பரப்புரை நிறைவு விழா 07.08.2025 தீன் நகரில் நடைபெற்றது . இதில் தீன்நகர் துணை இமாம் கிராஅத் ஓதி துவங்கி வைத்தார் ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் ஊழியரும் தீன் நகர் இமாம் மெளலவி ஜாபர் சாதிக் மன்பஈ தலைமையில் ஜமாஅத்தே இஸ்லாமி  ஹிந்த் மண்டல அமைப்பாளரும்  மதுரை இஸ்லாமிக் சென்டர் துணை செயலாளருமான 
நசீர் ஹுசைன் அவர்கள்  சிறப்புரை ஆற்றினார்கள்.
மாறிவரும் சூழலில் பெற்றோர்களின் பொறுப்பு எனும் தலைப்பில்  உரை நிகழ்த்தினார் 
பெற்றோர்கள் பிள்ளைகளுக்கு அறிவுரை கூறுவதற்கு முன், முதலில் அவர்கள் அந்த நற்பண்களை கடை பிடிப்பவர்களாக இருக்க வேண்டும். பெற்றோர்கள் தான் குழந்தைகளுக்கு ரோல் மாடல். அவர்கள் என்ன செய்கிறார்களோ, அதைப் பார்த்துதான் அவர்களுடைய பழக்க வழக்கங்களும் அமையும். நல்ல குழந்தைகளாக வளர்க்க நினைப்பவர்கள், முதலில் நல்ல பெற்றோராக இருக்க வேண்டும்.

குழந்தைகள் செய்யும் நல்ல செயல்களை வாய்விட்டு பாராட்ட வேண்டும். பாராட்டுக்கு குறைவே இருக்க கூடாது. சில தவறுகளை செய்யும்போது, கவனமாக அந்த தவறால் என்ன பாதிப்பு ஏற்படும் என்ற காரணத்தைச் சொல்லி, இனி அவ்வாறு செய்யாமல் இருக்க கற்றுக்கொடுக்க வேண்டும்.

இன்றைய தலைமுறையினர் குற்றச் செயல்களும் சமூகத்தின் மீது இழைக்கப்படும் குற்றச்சாட்டுகளும் அதற்கான தீர்வுகளும் பெற்றோர்கள் மேற்கொள்ள வேண்டிய கடமைகளும் என்ற அடிப்படையில் உரை நிகழ்த்தினார் 
இதில் ஆண்கள் பெண்கள் என 80 க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர்.