மண்ணின் கைகள் இதயங்கள் இந்தியாவில் சிஐஓ 10 லட்சம் மரம் நடுவோம் நாடு தழுவிய பரப்புரை முன்னிட்டு இறுதி நிகழ்வாக தஞ்சாவூர் வட்டம் சார்பாக 27/7/2025 அன்று குழந்தைகளின் பேரணி நடைபெற்றது. இந்த நிகழ்விற்குச் சிறப்பு விருந்தினராக தஞ்சாவூர் மாண்புமிகு மேயர் சன் ராமநாதன் அவர்கள் கலந்து கொண்டார்கள். மேலும் சிறப்பு விருந்தினராக ஜமாத்தே இஸ்லாமி ஹிந்த் சாலிடாரிட்டி மாநிலத் தலைவர் சகோதர் முஹம்மது ரியாஸ் அவர்களும் கலந்து கொண்டார்கள். மற்றும் சமூக ஆர்வலராக கடந்த பத்தாண்டுகளாக மரம் நட்டு வளர்த்து பராமரிப்பதை தன்னுடைய வாழ்நாளில் ஒரு சேவையாக ஆக்கிக் கொண்டவர் சகோதரர் ஜமீல் அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்கள். நிகழ்ச்சியின் தொடக்கமாக கிராஅத் உமர் அப்துல்லா ஓதித் துவங்க, சகோதரி தன்ஜீலா பானு அவர்கள் வழிநடத்த, சகோதரி பாத்திமா அவர்கள் வரவேற்புரை ஆற்றினார். சிறப்புரையாக மேயர் அவர்கள் குழந்தைகளிடம் குழந்தையாக உரையாற்ற, மேலும் மேயர் அவர்களுக்கு, மாநில தலைவருக்கு, சமூக ஆர்வலருக்கு சிறப்பு செய்தது மற்றும் குழந்தைகள் சார்பாக தென்ன மரக்கன்று மேயர் அவர்களுக்கு அன்பளிப்பு வழங்கப்பட்டது. சாலிடாரிட்டி சார்பாக போட்டியில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகள் சர்டிபிகேட் மேயர் அவர்கள் வழங்கினர். பின்னர் கொடி அசைக்க பேரணி புறப்பட்டது. ஒரு மணி நேரம் நான்கு பள்ளி வாசல் ஏரியாவிற்கு குழந்தைகள் ஒரு மணி நேரமாக குதூகலமாக பேரணி சென்றார்கள். மேலும் அத்தர் பள்ளி வாசல் முன் குழந்தைகள் பேட்டி கொடுத்தார்கள் மற்றும் இறுதியாக குழந்தைகள் செய்து வந்த சாட் பற்றி, மரத்தைப் பற்றி பேசினார்கள். நிகழ்ச்சி இனிதே நிறைவுற்றது. அல்ஹம்துலில்லாஹ்.