News Channel

நிறைவு விழா

ChatGPT said:
ண்ணில் கைகள் இந்தியாவில் இதயங்கள் என்ற தேசிய அளவிலான பரப்பரையை முன்னிட்டு ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் மங்களம் கிளை மகளிர் அணி சார்பாக பரப்புரை நிறைவு விழா நடைபெற்றது. 27/7/2025 ஞாயிற்றுக்கிழமை மதியம் 4 மணிக்குமங்கலம் மஸ்ஜிதுல் இக்லாஸ் வேட்டுவபாளையம் பகுதியில் CIO வின்பேரணி நடைபெற்றது. இதைத்தொடர்ந்து 5 மணி அளவில் கிராஅத்... ஜனாப்: ஹாபிழ் நிசாருத்தீன் (மஸ்ஜிதுல் இக்லாஸ் இமாம்) அவர்கள் கிராஅத் ஓதி துவங்கி வைத்தார். ஜனாப்: A அப்துல்வதூத் (JIH மங்கலம் கிளை தலைவர்) அவர்கள் தலைமை உரை ஆற்றினார். 'இன்றைய சூழலில் பெற்றோர்களின் பொறுப்புகள்' என்ற தலைப்பில் ஜனாப்: நஜீர் ஹுசைன் (JIH தென் மண்டல பொறுப்பாளர் அழைப்பியல் துறை) அவர்கள் சிறப்புரை நிகழ்த்தினார். ஜனாப்: S அப்துல் ரஷீத் (JIH மங்கலம் கிளை செயலாளர்) அவர்கள் நிகழ்ச்சியை தொகுத்து நன்றி உரை நிகழ்த்தி ஜமாஅத் அறிமுகம் மற்றும் பணிகள் குறித்து பேசினார். இறுதியாக பரப்புரையை முன்னிட்டு மங்கலத்தில் 5 பகுதியில் நடந்த ஓவிய போட்டிக்கான பரிசும் 80 சான்றிதழ்களும் CIO மாணவ மாணவிகளுக்கு வழங்கப்பட்டது. இயற்கை தொடர்பான project மற்றும் கையெழுத்திட்டு மரம் வளர்ப்போம் என்ற உறுதிமொழி எடுத்தார்கள். இந்நிகழ்வில் JIH ஆண்கள் வட்டம், பெண்கள் வட்டம், SIO மற்றும் ஆதரவாளர்கள் ஆர்வத்துடன் பங்களிப்பு செய்தார்கள். பின்பு டீ, Snacks மற்றும் துஆவுடன் நிகழ்ச்சி நிறைவடைந்தது. 100க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டார்கள். அல்ஹம்துல்லாஹ்! அல்லாஹ் நம் செயல்களை ஏற்றுக் கொள்வானாக!