News Channel

ஒருங்கிணைந்த சிறப்பு நிகழ்ச்சி

ஒருங்கிணைந்த  தர்பியா நிகழ்ச்சி

ஒவ்வொரு காலண்டிலும் உறுப்பினர், ஊழியர்களை ஒருங்கிணைத்து JIH-இஸ்லாமிய சென்டர் ஊழியர்வட்டம் சார்பாக தர்பியா நிகழ்ச்சி தொடர்ந்து நடத்தப்பட்டு வருகின்றது. 

அவ்வகையில் தற்போதுள்ள காலாண்டிற்கான தர்பியா நிகழ்ச்சியாக 
كُوْنُوْۤا اَنْصَارَ اللّٰهِ
"நீங்கள் அல்லாஹ்விற்கு உதவியாளராக ஆகிவிடுங்கள்"
எனும் மையக்கருத்தில் 

ராமநாதபுரம் ரமலான் நகரில் அனைத்து உறுப்பினர் ஊழியர்களுக்கு ஒருங்கிணைந்த தர்பிய நிகழ்ச்சி 6.8. 2025 புதன்கிழமை காலை 10 மணி முதல் மாலை 4:30 மணி வரை நடைபெற்றது. 

சிறப்பு விருந்தினர்:
இச்சிறப்பு நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக 
கோவை மண்டல அமைப்பாளர் 
ஜனாப் :  S. அப்துல் காதர் ஜெய்லானி 
அவர்கள் கலந்து கொண்டார்கள். 

தலைமை:
இந்நிகழ்ச்சியை JIH-இஸ்லாமிய சென்டர் ஊழியர் வட்டம் நாஜீம் மற்றும் மண்டல அமைப்பாளர் 
ஜனாப் : கா. நஜீர் ஹுசைன்அவர்கள் தலைமையேற்று நடத்தி கொடுத்தார்கள். 

 நிகழ்ச்சியின் துவக்கமாக 
கிராத் : மௌலவி ஷேக் அப்துல்லாஹ் தாஃவதி  கிராஅத் ஓதி நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார்கள். 

அதனை தொடர்ந்து 
தலைமையுரை
ஜனாப் :- K. நஜீர் ஹுசைன்

பயிற்சி :
பயிற்சிக்கான அம்சத்தில் உயிரோட்டத்தில் உள்ள நான்கு தலைப்புகளை உறுப்பினர் மற்றும் ஊழியர்களுக்கு வழங்கப்பட்டு உரையாக கொடுக்கப்பட்டது.

1. மௌலவி சம்சுதீன் ஃபைஜி [ தலைப்பு: குர்ஆன் கூறும் இதயம்

இதயம் நான்கு பண்புகளைக் கொண்டிருக்கும்  1.எந்த இதயம் தவறான நம்பிக்கைகள் இறை மறுப்பு இணைவைப்பு நயவஞ்சகம் போன்ற அனைத்திலிருந்து அப்பாற்பட்டதாய் தூய்மையானதாய் இருக்கும் .
2. தன்னுடைய பிள்ளைகளுக்கு நேரிய வழியை காண்பிக்க கூடியதாய் இருக்கும்.
3. நரகத்தின் பக்கம் இட்டுச் செல்கின்ற காமத்தில் இருந்தும் மன இச்சைகளிலிருந்தும் துப்புரவானதாய் அது இருக்கும் 
4. அந்த இதயத்தின் அல்லாஹ்வைத் தவிர வேறு எதுவும் எவரும் இருக்க மாட்டார்கள் இதிலிருந்து இதயத்தை சீர்படுத்துவது எந்த அளவிற்கு முக்கியத்துவம் வாய்ந்தது என்பதை உணர்ந்து கொள்ளலாம்.

2. மௌலவி ஆதம் அலி ஃபைஜி தலைப்பு: குர்ஆன் கூறும் இதயம் 

மகத்துவமிக்க குர்ஆனில் சில இதயங்கள் குறித்து முத்திரை ஏற்பட்ட இதயங்கள் என்பதாக வர்ணிக்கப்பட்டுள்ளது அந்த இதயங்கள் மீது அல்லாஹ் முத்திரையிடுவதில்லை அதற்கு மாறாக அந்த இதயங்களை கொண்டவர்களின் தவறான செயல்களின் காரணமாகத்தான் அவற்றின் மீது முத்திரை இடப்படுகின்றது.

3. மௌலவி, அப்துல் மாலிக் ஸலாமி
 தலைப்பு: முஸ்லிம்களிடம் அறிவு தேடல் குறைந்தது ஏன் ? 


4. மௌலவி முஹம்மது ரஃபீக் தாஃவதி  
தலைப்பு: அழைப்பு பணிக்கு மொழி அறிவு அவசியம்
 
மொழி என்பது பண்பாடு மற்றும் கலாச்சாரத்தின் மிக முக்கிய குறிப்பாக விளங்குவதோடு மட்டுமல்லாமல் ஆளுமை வளர்ச்சிக்கும் பெரும் பங்காற்றுகின்றது கல்வி மற்றும் கலாச்சாரம் மொழியின் மூலமாக பாதுகாக்கப்படுகின்றன கல்வியை பத்திரிக்கை துறையை அரசியல் ,வியாபாரம் , பொருளாதாரம் சர்வதேச தொடர்புகள் உட்பட அனைத்து துறைகளிலும் மொழியின் முக்கியத்துவத்தை உணர்ந்து கொள்ளலாம்.

காலை துவங்கப்பட்ட முதல் அமர்வில் இந்நிகழ்ச்சிகள் நடைபெற்றது. 

இரண்டாம் அமர்வு:

மதியம் லுஹர் தொழுகை மற்றும் உணவிற்கு பிறகு இரண்டாம் அமர்வாக

தர்பியா நிகழ்ச்சியின் 'அசல் பகுதியான'
"இரண்டு ஆண்டு திட்டமும் நமது செயல்பாடும், இலக்கும் ஒரு பார்வை !"

என்று ஒவ்வொருவரும் சுய திட்டம் சமர்ப்பித்தல் தலா 4' நிமிடம் எடுத்துக்கொண்டு அவரவர்கள் பகுதிகளில் செயல்திட்டத்தின் அடிப்படையிலும் இலக்கின் அடிப்படையிலும் என்ன பணிகள் நடந்து வருகின்றது. என்பதை சுய ஆய்வின் மூலமாக அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும். என்று முடிவு செய்து இஸ்லாமிக் சென்டர் ஊழியர் வட்டத்தில் உள்ள அனைத்து பகுதிகளிலும் வருகை தந்த உறுப்பினர் ஊழியர்கள் அவரவர்கள் செய்கின்ற பணி செய்யப் போகின்ற பணி ஆகியவற்றை குறித்து பேசப்பட்டது.

சிறப்புரை;
---------------------
இறுதியாக தர்பியா நிகழ்ச்சியின் மையக்கருத்தான
كُوْنُوْۤا اَنْصَارَ اللّٰهِ
"நீங்கள் அல்லாஹ்விற்கு உதவியாளராக ஆகிவிடுங்கள்"

எனும் தலைப்பில் சிறப்பு விருந்தினராக வருகை புரிந்த 
ஜனாப் ;- S. அப்துல் காதர் ஜெய்லானி
( கோவை மண்டல அமைப்பாளர் D.O )
அவர்கள் சிறப்புரையாற்றினார்கள்.

நடைபெற்ற இந்த தர்பியா நிகழ்ச்சியை அழகான முறையில் தொகுத்து வழங்கினார்
ஆலிம் , அபுபக்கர் தாஃவதி அவர்கள் 
இறுதியாக 
மௌலவி, அப்துல் மாலிக் ஸலாமி
அவர்களின் நன்றியுரை மற்றும் துஆவுடன்  நிகழ்ச்சி சிறப்பாக நிறைவடைந்தது.