News Channel

கடையநல்லூர் CIO சார்பாக மரம் நடும் நிகழ்ச்சி .......

கடையநல்லூர் ஹிஜ்ரி 1447 ஸஃபர் மாதம் 4 (ஜுலை 30 2025) 

ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்தின் குழந்தைகள் அமைப்பான ClO தேசியளவில் மண்ணில் கைகள் இந்தியாவில் இதயங்கள் என்ற
 மைய கருத்தில் சுற்றுச்சூழலை மையப்படுத்தி நாடுமுழுவதும் 10 இலட்சம் மரக்கன்றுகளை நடும் பிரச்சாரத்தை நடத்திவருகிறது.

பிரச்சார இயக்கத்தின் ஒரு பகுதியாக கடையநல்லூர் CIO கிளையின் சார்பில் இன்று 
கடையநல்லூர், மங்களாபுரம் அல்அஸ்ஹர் பள்ளியில் மரம்நடும்பணியை குழந்தைகள் மேற்கொண்டனர்..

மரங்களின் பயன்கள் பற்றி, மரம் வளர்த்தலின் முக்கியத்துவம் பற்றிய சிறிய உரையுடன் ஆரம்பித்தோம்..

இது ஒரு சிறப்பான  முன்னெடுப்பு என ஆசிரியப்பெருமக்கள் பாராட்டினர்...குழந்தை கள் ஆர்வமுடன் பங்கெடுத்தனர்..