News Channel

உடுமலை நிறைவு விழா குழந்தைகள் பேரணி

உடுமலை ஜுலை 26

ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்தின் குழந்தைகள் அமைப்பான ClO தேசியளவில் மண்ணில் கைகள் இந்தியாவில் இதயங்கள் என்ற மைய கருத்தில் சுற்றுச்சூழலை மையப்படுத்தி நாடுமுழுவதும் 10 இலட்சம் மரக்கன்றுகளை நடும் பிரச்சாரத்தை நடத்திவருகிறது.

பிரச்சார இயக்கத்தின் ஒரு பகுதியாக உடுமலை CIO கிளையின் சார்பில் இயற்கை வளங்களை பாதுகாப்போம் என்ற முழக்கத்துடன் 
குழந்தைகள் கலந்து கொண்ட பேரணி அன்று (26:07:2025 சனிக்கிழமை) உடுமலையில் நடைபெற்றது. 

இந்த பேரணியை 
ஐயா .SI கிருஷ்ண மூர்த்தி அவர்களும்,  உடுமலைகிளை ஜமாஅத்  தலைவர் சான் பாஷா அவர்களும்  CIO  கொடியை அசைத்து பேரணியை துவக்கி வைத்தனர். இந்த பேரணி நகரின் முக்கிய வீதிகளில் வளம் வந்தது நிகழ்வின்  இறுதியாக ஒவ்வொரு குழந்தைகளும் ஒரு மரத்தை நட்டு அதை பராமரித்து வளர்க்க வேண்டும் என்று உறுதி மொழியோடு பேரணி நிறைவுற்றது.

CIO  என்பது 5 வயது முதல் 12 வயது வரை உள்ளவர்களை நல்வழிப்படுத்தும் ஒரு அமைப்பாக அகில இந்திய அளவில் செயல்பட்டு வருகிறது. இந்த அமைப்பின் மூலம்  குழந்தைகளை நாளைய சிறந்த தலைவர்களாகவும் , நாட்டின் வளர்ச்சிக்கு பயன்படக்கூடியவர்களாகவும் மாற்றுவதை  இலக்காக கொண்டு செயல்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

தகவல் 
JIH MEDIA 
UDUMALAIPETTAI