News Channel

மரகன்று நடுதல் மாணவ மாணவிகளின் விழிப்புணர்வு

இராமநாதபுரம் - மக்கா நகர் 
ஜமாத்தே இஸ்லாமி ஹிந்த் CIO - children Islamic organisation சார்பாக நாடு தழுவிய அளவில் 
"மண்ணில் கைகள் இந்தியாவில் இதயங்கள்" 
என்ற தலைப்பில் பரப்புரையின் நடத்தப்பட்டு வருகின்றது. 

பரப்புரையில் ஓர் பகுதியாக JIH-ஜமாஅத் தே இஸ்லாமி ஹிந்த், இஸ்லாமிக் சென்டர் ஊழியர் வட்டம்  சார்பாகப்பில் JIH-ஊழியரும் மக்கா நகர் ஜும்ஆ பள்ளிவாசல் இமாம் ஆலிம் முஹம்மது ஜாஃபர் அவர்கள் தலைமையில் 
ராமநாதபுரம் மக்கா நகரில் 17/7/2025 வியாழக்கிழமை அன்று "மண்ணில் கைகள் இந்தியாவில் இதயங்களின்" மாணவ மாணவிகளின்  நிகழ்வுகள் நடைப்பெற்றது.

நடைபெற்ற நிகழ்வு ;

1.மரகன்றுநடுதல்.
2.சிறுஉரை
3.ஓவியம்வரைதல்
4.கவிதை
போன்ற நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன.

மரமறுக்கும் மரங்களே - உன்
தாயின் கருவிலே உன்
தொப்புள் கொடி அறுந்திருந்தால் நீ
தப்பியிருப்பாயா!

அட சண்டாளா குடிநீரும் கிடைக்காதே
அதையுமா மறந்துபோனாய்!
மண் தழைக்க மழை!
மழை தழைக்க மரம் தேவைதானே !

உனக்கு கொடுக்கும் அவைகள்
உன்னிடம் என்னத்தைக் கேட்டது !
நீ இல்லாமல் மரங்கள் வாழ்ந்துவிடும் !
மரமில்லாவிட்டால் நீ மரித்துவிடுவாய் !

நீ அழிந்தால் உன் சொந்தம் அழும்
மரங்கள் அழிந்தால் வரும் சந்ததியே அழியும்!
எச்சரிக்கை! நீ வெட்டுவது மரத்தையல்ல
வரும் சந்ததியின் நுரைஈரலையே வெட்டுகிறாய்!

முடிந்தால் விதை! அல்லது விட்டுவிடு
பூ அறு! காயும் கனியும்கூட அறு!
நிழலுக்கு ஒதுங்கிய நீ அதன்
கழுத்தை அறுக்காதே !

மரத்தின் நன்மைகள் குறித்து கவிதை மொழியில் விழிப்புணர்வு நடை பெற்றது.

இதில் 15 க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் கலந்து கொண்டார்கள்.


- JIH- ISLAMIC CENTRE CIRCLE