• திமுக தலைமையிலான இந்தியா கூட்டணிக்கு தமிழ்மாநில ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் ஆதரவு

News Channel

வட்டார உலமாக்கள்சபை பொறுப்பாளர்கள் சந்திப்பு

 அக்டோபர் 31
 ஜமாத்தே இஸ்லாமிக் ஹிந்த் மணப்பாறை கிளை சார்பில்
  மணப்பாறை வட்டார உலமாக்கள் தேர்தலில் வெற்றி பெற்ற செயலாளர் மற்றும் பொருளாளர் அவர்களையும் சந்திக்கும் நிமித்தமாக சந்திப்பு ஏற்பாடு செய்யப்பட்டது.
 அதன் அடிப்படையில் மணப்பாறை நகர ஜமாத்தே இஸ்லாமிக் ஹிந்த் கிளையின் தலைவர் ஜபருல்லா , ஜாபர் ஹுசைன் மன்பயீ மற்றும் கிளையின் உறுப்பினர்கள் தேர்தலில் வெற்றி பெற்று செயலாளராக தேர்வு செய்யப்பட்ட புத்தாநத்தம் பள்ளியின் இமாம் ரிபாய் ஆலிம் அவர்களையும் மற்றும் பொருளாளர் அப்துல் பாசித் ஆலிம் அவர்களையும் சந்தித்தனர்.
 நிகழ்வில் மணப்பாறை மற்றும் மணப்பாறையை சுற்றியுள்ள பகுதிகளை சார்ந்த இஸ்லாமிய மக்களுக்கு இஸ்லாத்தின் சிந்தனைகளையும் கருத்துக்களையும் செயல்பாடுகளையும் மக்களுக்கு தெரிவிப்பதன் வாயிலாக அவர்கள் மனதில் நேர்மறையான கருத்தாக்கத்தை ஏற்படுத்த வேண்டும் என்று கூறினார்.
 அவ்வாறான மாற்றத்தை ஏற்படுத்துவதன் மூலம் இஸ்லாமிய மக்களுக்கு ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்தி அதன் மூலமாக இன்ன பிற சமுதாய மக்களிடம் இஸ்லாத்தின் மீதான வெறுப்பு கருத்துக்களை மாற்றுவதற்கான முயற்சிகளை தாமும் மேற்கொள்வதாக கூறினார்.
 ஜமாத்தே இஸ்லாமிக் ஹிந்தின் நான்காண்டு செயல்திட்டமான மக்களின் கருத்துக்களை இஸ்லாத்திற்கு ஆதரவாக மாற்றுவது எனும் அடிப்படையில் தாங்களும் இணைந்து பணியாற்றுவதாக கூறினார்.
 நேர்மையாக சிந்தனைகளை இஸ்லாமிய மக்களிடத்தில் கூட்டுவதன் வாயிலாகவும் எதிர்மறையான சிந்தனைகளை அவரிடம் இருந்து அழிப்பதன் வாயிலாகவும் இஸ்லாத்தின் தாக்கத்தை மேலோங்க செய்து அதன் மூலமாக மக்களிடம் இஸ்லாத்தின் சீரிய கருத்துக்களை பரப்புவதற்கு சிறப்பான முயற்சிகளை மேற்கொள்வதாக கூறினார்.
மேலும் அவர்களுக்கு கிளையின் சார்பில் இஸ்லாம் வெற்றிபெற
மற்றும் நபிகளாரின் சமூக உறவு
ஆகிய புத்தகங்கள் கொடுக்கப்பட்டன.
நிகழ்வில் ஆலிம் அக்பர் மற்றும் புத்தானத்தம் ஜமாத் மக்களும் கலந்து கொண்டனர்.
நிகழ்வின் இறுதியில் சந்திப்பின் நோக்கம் வெற்றி அடைய இறைபிரார்த்தனை நடைபெற்றது .