News Channel

மக்கள் கருத்தை இஸ்லாத்திற்கு சாதகமாக மாற்றுவது

ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் துவரங்குறிச்சி கிளையின் மக்கள் கருத்தை இஸ்லாத்திற்கு சாதகமாக மாற்றுவது என்ற மிஷன் அடிப்படையில் மண்ணில் கைகள் இந்தியாவில் இதயங்கள் என்ற பரப்புரையை முன்னிட்டு மதுரை ஏபிள் கிட்ஸ் சிறப்பு பள்ளி அறிவுத்திறன் குறைந்த மற்றும் மூளை முடக்குவாத குழந்தைகளுக்கான பள்ளி.. அங்கு குழந்தைகள் அவர்கள் தங்கள் கையில் மரக்கன்றுகளை நட்டு வைத்தனர்..
மரங்களை குறித்து அவர்கள் புரிந்த விஷயங்களை எங்களுடன் பகிர்ந்தும் கொண்டார்கள்.. இன்னும் அவர்களுக்குள்ள திறமைகள் எல்லாம் வெளிப்படுத்தினார்கள். மற்றும் அங்குள்ள ஆசிரியர்களுக்கு சமரசம் உதயதாரகை போன்ற இதழ்களும் வழங்கப்பட்டது..
இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட குழந்தைகள் 35 .. அந்த குழந்தைகளுக்கு இனிப்புகளும் வழங்கப்பட்டது..
துவரங்குறிச்சியில் இருந்து நாங்கள் அங்கு சென்ற அந்த குழந்தைகளை பார்த்தது அந்த குழந்தைகளும் மகிழ்ச்சியாக இருக்கிறது என்பதையும் சொன்னார்கள். அங்குள்ள ஆசிரியர்களும் முஸ்லிம்கள் இப்படி சேவையுடன் பணியாற்றுவது எங்களுக்கு ரொம்ப சந்தோசமாக இருக்கிறது என்று தங்கள் கருத்தையும் பதிவு செய்தார்கள்
இந்நிகழ்ச்சிக்கு துவரங்குறிச்சி கிளையின் உறுப்பினர் கள் சகோதரி ராபியா ஜன்னத் ஜீனத் நஸ்ரின் ஊழியர் அனீஸ் பாத்திமா அவர்கள் கலந்து கொண்டார்கள்