மதுரை சட்டகல்லூரி முதல்வருடன் மதுரை ClO குழந்தைகள் - சந்திப்பு
மண்ணில் கைகள் இந்தியாவில் இதயங்கள் பரப்புரையில் மதுரையில் பல்வேறு இடங்களில் மரங்கன்று நடும் நிகழ்ச்சி குழந்தைகளால் பேரார்வதுடன் வெகு சிறப்பாக நடைபெற்றுவருகிறது,
அதன் ஒரு பகுதியாக 25.07.25 வெள்ளிகிழமை அன்று மதுரை சட்ட கல்லூரி வளாகத்தில் மரம் நடும் நிகழ்ச்சி நடைபெற்றது கல்லூரி முதல்வர் பேராசிரியர் Dr. P.குமரன் அவர்களின் தலைமையில் சட்ட கல்லூரி வளாகத்தில் மரம் நடும் நிகழ்ச்சி நடைபெற்றது மிகவும் ஆர்வத்துடனும் குழந்தைகளுக்கு உற்சாகம் ஊட்டும் வண்ணம் அவர் கலந்து கொண்டு சிறப்பித்தார்
முன்னதாக இந்த பரப்புரையின் முக்கியத்துவம், அதன் நோக்கம், குழந்தைகளின் பசுமை கனவு, இந்த பிரச்சார இயக்கத்தின் உணர்வு பிண்ணனி குறித்து மிகவும் பொறுமையுடனும், கவனத்துடனும் கேட்டுத் தெரிந்து கொண்டார், சிறு வயதிலேயே சமூக அக்கரையுடன் செயல்படும் சிறார்களை கண்டு
உள்ளபடியே மனதிற்கு மிகவும் மகிழ்ச்சி தருகின்றன என ClO குழந்தைகளை வெகுவாக பாராட்டினார்.