அக்டோபர் 11 தேசிய பெண் குழந்தை தினத்தையொட்டி காண்டை பகுதியிலுள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலை பள்ளிக்கூடத்திற்கு சென்று பெண் குழந்தைகள் தினத்தையொட்டி சந்திப்பு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
காண்டை ஜும்ஆ பள்ளிவாசல் இமாம் மௌலவி அப்துல் மாலிக் தலைமையில்.
JIH - ஊழியர் வட்ட பொறுப்பாளர் ஜனாப் : தாயீ நஜீர் ஹுசைன் அவர்கள்
பள்ளிக்கூடத்தில் படித்துக் கொண்டிருக்கும் பெண் குழந்தைகளை ஒருங்கிணைத்து அவர்களுக்கு தன்னம்பிக்கை ஊட்டும் வகையில் நடப்பு காலத்தில் பெண் குழந்தைகள் படைத்த சாதனைகளை எடுத்துக்கூறியும் பெண் பிள்ளைகள் மத்தியில் இருக்கவேண்டிய தன்னம்பிக்கையையும், எதிர்காலத் திட்டங்களையும், ஒழுக்க மாண்புகளையும் சமூக அக்கறைகளையும் வளர்த்து கொள்ள வேண்டுமென்று எடுத்துரைக்கப்பட்டது.
மற்றும் அங்குள்ள தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியைகளை சந்தித்து சிறிய கலந்துரையாடல் நடைபெற்றது.
இஸ்லாத்தில் பெண் குழந்தைகள் என்பது இறைவனுடைய அருள் பெண் குழந்தைகள் இருக்கின்ற இடத்தில் இறைவன் தன்னுடைய அருள் வளத்தை வழங்குகிறான் குடும்பத்தை பாதுகாக்கின்றான் போன்ற செய்திகளை எடுத்துக் கூறுகின்ற பொழுது அவைகளை ஆச்சரியமாக பார்த்தார்கள். சமூகத்தில் பெண் குழந்தைகள் இழிவாக கருதப்படக் கூடிய இந்த காலத்திலும் இஸ்லாம் 1450 ஆண்டுகளுக்கு முன்பாகவே பெண் குழந்தையின் கண்ணியத்தையும் உயர்வையும் போற்றி இருக்கிறதே அவர்கள் ஆச்சரியமாக உள்ளது என கூறினார்கள்.
இறுதியாக அனைவர்களுக்கும் இனிப்புகள் வழங்கப்பட்டன.