News Channel

பசுமையின் தூதர்கள் - காவல்துறை அதிகாரிகளைச் சந்தித்து மரக்கன்றுகளைப் பரிசளித்த "CIO குழந்தைகள்"

பசுமையின் தூதர்கள் - காவல்துறை அதிகாரிகளைச் சந்தித்து மரக்கன்றுகளைப் பரிசளித்த "CIO குழந்தைகள்" 

“மண்ணில் கைகள், இந்தியாவோடு இதயங்கள்” பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக, ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் கோவை பெருநகர் சார்பில் கோவை குனியமுத்தூர் காவல் சரக துணை ஆணையர் (Assistant Commissioner) Dr. அஜய் தங்கம் அவர்களை மரியாதையோடு சந்தித்த Children Islamic Organisation (CIO) குழந்தைகள் மறக்கன்றுகளைப் பரிசளித்தது மட்டுமல்லாமல், தங்களது பசுமை கனவையும் பகிர்ந்தனர்.

CIO குழந்தைகளை நேரில் வரவேற்ற துணை ஆணையர், அவர்களிடம் CIO குறித்தும், சுற்றுச்சூழலுக்காக மேற்கொள்ளும் முயற்சிகளையும் கேட்டு அறிந்தார். சிறுவர்களின் விழிப்புணர்வும், விடாமுயற்சியும் அவரை ஆழமாக கவர்ந்தது. குழந்தைகளை வெகுவாக பாராட்டினார்.

குழந்தைகள் பரிசளித்த மரக்கன்றினைப் பெற்றுக்கொண்டு உடனே தனது காவல் நிலைய வளாகத்தில் குழந்தைகளோடு இணைந்து நட்டு வைத்தார்.  “நீங்கள் எப்போது வந்தாலும், இங்கே நீங்கள் நடுகை செய்த மரம் உங்களுக்கே நிழல் தரும்,” என்றார் அவர், புன்னகையோடு! இந்த நிமிடங்கள், குழந்தைகளின் இதயத்தில் என்றும் மறக்க முடியாத ஒன்றாக பதிந்தன.

தொடர்ந்து  ஜூலை 27 அன்று CIO கோவை சார்பாக நடைபெறவுள்ள "மண்ணில் கைகள், இந்தியாவோடு இதயங்கள்” பிரச்சார இயக்கத்தின் இறுதி நிகழ்வான குழந்தைகளின் சுற்றுச்சூழல் பேரணிக்காக காவல்துறையிடம் தங்கள் மழலை மொழியில் அனுமதியை கேட்டனர்.  

பின்னர், கரும்புக்கடை காவல் நிலையத்திற்கு சென்ற CIO குழந்தைகள், அங்கு காவல் உதவி ஆய்வாளர் திரு. ஜோசெப் அவர்களையும் சந்தித்து மரக்கன்றுகளை வழங்கினார்கள்.

 ஒரு வளமான எதிர்காலத்திற்கான குழந்தைச் செல்வங்கள் தயாராகிறார்கள் என்று காவல் அதிகாரிகள் குழந்தைகளையும், CIO பணிகளையும் வெகுவாக பாராட்டினர்.