News Channel

ஓவியப் போட்டி மூலம் சுற்றுச்சூழல் பரப்புரை!

இன்று (20.07.2025) கும்பகோணம் வட்டத்தில், "மண்ணில் கைகள்!!! இந்தியாவில் இதயங்கள்!!!" என்ற சுற்றுச்சூழல் பரப்புரையின் கீழ், அல் அமீன் பள்ளியில் ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் கும்பகோணம் கிளை மகளிர் அணி மற்றும் CIO (சி.ஐ.ஓ) சார்பாக ஓவியப் போட்டி நடத்தப்பட்டது.  

இந்த நிகழ்வில் 8 பள்ளிகளில் இருந்து 120 குழந்தைகள் கலந்து கொண்டு, அவர்களின் கலைத்திறனை வெளிப்படுத்தினர். போட்டியில் பங்குபற்றிய பள்ளிகள்:  
1. அல் அமீன் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி  
2. செயின்ட் அனீஸ் பள்ளி  
3. சரஸ்வதி பாடசாலை  
4. காவேரி ஸ்கூல்  
5. மைதீன் ஸ்கூல்  
6. ஸ்டார் ஸ்கூல்  
7. செயின்ட் ஜோசப் ஸ்கூல்  
8. கிரைஸ் த கிங் பள்ளி  

இந்த நிகழ்வின் மூலம், மரங்கள் வளர்ப்பதின் முக்கியத்துவம் மற்றும் ஒரு மாத சுற்றுச்சூழல் பரப்புரை பற்றி குழந்தைகளுக்கு விளக்கப்பட்டது.  

அல்ஹம்துலில்லாஹ், இந்த முயற்சி இளைஞர்களிடம் சூழல் உணர்வை ஊட்ட உதவியது!